Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பயப்பட்ட மாதிரியே ஆயிடுச்சு.. விஜய் ஷங்கருக்கு காயம்.. 2 வீரர்கள் காலி.. பதற்றத்தில் இந்திய அணி!

லண்டன் : உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்று இருந்த தமிழக வீரர் விஜய் ஷங்கர், வலைப்பயிற்சியில் காயமடைந்தார்.

ஏற்கனவே, ஒரு இந்திய வீரர் காயத்தோடு உலகக்கோப்பை தொடருக்கு கிளம்பிச் சென்றதாக தகவல்கள் கூறுகின்றன.

கேள்விக் குறி

கேள்விக் குறி

உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் 2 ஆல்-ரவுண்டர் வீரர்களின் நிலை கேள்விக் குறியாகி இருக்கிறது. இதனால், கேப்டன் கோலி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி என்ன செய்வது என பதற்றத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. விஜய் ஷங்கருக்கு என்ன ஆச்சு?

என்ன ஆச்சு?

என்ன ஆச்சு?

இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோத உள்ள பயிற்சிப் போட்டி இன்று நடைபெற இருந்தது. இதற்காக இந்திய வீரர்கள் வலைப் பயிற்சியில் ஈடுபட்டு இருந்தனர். விஜய் ஷங்கரும் வலைப் பயிற்சியில் ஈடுபட்டு இருந்தார்.

வலியால் துடித்தார்

வலியால் துடித்தார்

கலீல் அஹ்மது பந்துவீச்சில் பயிற்சி மேற்கொண்டு இருந்த போது, விஜய் ஷங்கரின் வலது கையில் காயம் ஏற்பட்டது. வலியால் துடித்த விஜய் ஷங்கர், பயிற்சியில் இருந்து கிளம்பிச் சென்றார்.

பயிற்சிப் போட்டியில்..

பயிற்சிப் போட்டியில்..

அவர் உடனடியாக ஸ்கேன் எடுக்க அனுப்பப்பட்டுள்ளார். அதன் முடிவுகள் பயிற்சிப் போட்டிக்கு முன்னதாக கிடைத்து, அவருக்கு பெரிய காயம் ஏதும் இல்லாத பட்சத்தில் மட்டுமே, அவர் பயிற்சிப் போட்டியில் இடம் பெற முடியும்.

கேதார் ஜாதவ் குழப்பம்

கேதார் ஜாதவ் குழப்பம்

ஒருவேளை அவருக்கு காயம் பெரிதாக இருந்தால், உலகக்கோப்பை அணித் தேர்வு சற்றே சிக்கலாக வாய்ப்புள்ளது. விஜய் ஷங்கர் நிலை இப்படி என்றால், கேதார் ஜாதவ் நிலை குழப்பமான ஒன்றாக இருக்கிறது.

காயமடைந்தார்

காயமடைந்தார்

கேதார் ஜாதவ் ஐபிஎல் தொடரில் கையில் காயமடைந்தார். பின்னர், அவர் காயத்தில் இருந்து மீண்டதாக அறிவிக்கப்பட்டு, உலகக்கோப்பை அணியுடன் இங்கிலாந்து புறப்பட்டுச் சென்றார். ஆனால், அவரது காயம் முழுமையாக குணமாகவில்லை என தெரிகிறது.

ஏன் பந்து வீசவில்லை?

ஏன் பந்து வீசவில்லை?

ஐபிஎல் தொடர் முழுவதும் ஜாதவ் பந்து வீசவில்லை. சுழற் பந்துவீச்சாளரான அவர், தன் சாதாரண பந்துவீச்சை கொண்டே விக்கெட்கள் வீழ்த்துவதில் வல்லவர். ஆனால், சுத்தமாக அவர் ஐபிஎல் தொடரில் பந்து வீசாமல் போனதற்கு காரணம், அவருக்கு ஏற்கனவே கையில் தசைப் பிடிப்பு இருந்தது தான் என சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

பந்துவீசுவார்களா?

பந்துவீசுவார்களா?

இதனால், உலகக்கோப்பை தொடரில் கேதார் ஜாதவ் பந்து வீசுவாரா? என்பதே குழப்பத்தில் தான் உள்ளது. இவரை அடுத்து விஜய் ஷங்கரும், கையில் காயமடைந்துள்ளார். இதனால், அவரும் பந்து வீச முடியாத நிலை ஏற்படலாம்.

விஜய் இடம் பறிபோகுமா?

விஜய் இடம் பறிபோகுமா?

ஒரே நேரத்தில் இரண்டு ஆல்-ரவுண்டர்கள் காயமடைந்துள்ளது இந்திய அணிக்கு பின்னடைவாக அமைந்துள்ளது. இதில் விஜய் ஷங்கருக்குத் தான் பாதிப்பு அதிகம். காரணம், அனுபவம் குறைந்த அவரை இந்தியாவுக்கு அனுப்பி விட்டு, வேறு வீரர்களை அணியில் சேர்த்துக் கொள்ள வாய்ப்பு அதிகம்.

என்ன நடக்கும்?

என்ன நடக்கும்?

கேதார் ஜாதவ், விஜய் ஷங்கர் இருவரின் காயத்தால், இந்திய அணிக் கூடாரத்தில் பதற்றம் தெரியத் துவங்கி உள்ளது. இது அணி மாற்றத்தில் போய் முடியுமா? விஜய் ஷங்கர் தன் வாய்ப்பை தக்க வைத்துக் கொள்வாரா? பயிற்சிப் போட்டியில் பங்கேற்பாரா? பொறுத்திருந்து பார்க்கலாம்.

Story first published: Saturday, May 25, 2019, 8:55 [IST]
Other articles published on May 25, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+