இவங்க 2 பேர் இருக்குற வரை.. விஜய் ஷங்கருக்கு டீம்ல இடம் கிடைக்காது.. வேணா வேடிக்கை பார்க்கலாம்!!
Recommended Video
சென்னை : 2019 உலகக்கோப்பை தொடர் இன்னும் சில தினங்களில் துவங்க உள்ளது. உத்தேச இந்திய அணியில் இளம் தமிழக வீரர் விஜய் ஷங்கர் இடம் பெற்றுள்ளார்.
உத்தேச இந்திய அணியில் இடம் பெற்றாலும், போட்டிகளில் விஜய் ஷங்கர் களம் இறங்குவது கடினம் என பல்வேறு யூகங்கள் வலம் வருகின்றன. அதற்கு காரணம் என இரண்டு வீரர்கள் பெயர்கள் கூறப்படுகிறது. அவர்கள் யார்? விஜய் ஷங்கருக்கு களமிறங்கும் வாய்ப்பு கிடைக்க என்னதான் வழி?

ஆச்சரியம் அளித்த விஜய்
உலகக்கோப்பை தொடருக்கான அணி அறிவிக்கப்பட்ட போது அதில் ஆச்சரியம் அளித்த ஒரு பெயர் விஜய் ஷங்கர். சர்வதேச அனுபவம் கொண்ட அம்பதி ராயுடு மற்றும் இளம் அதிரடி வீரர் ரிஷப் பண்ட், இருவரையும் மீறி இடம் பெற்றார் விஜய். அப்போது, அது பரபரப்பாக பேசப்பட்டது.

மோசமான பார்ம்
அதன் பின், ஐபிஎல் தொடரில் விஜய் ஷங்கரின் மோசமான பார்ம் காரணமாக, அவருக்கு உத்தேச அணியில் இடம் கிடைத்தாலும், போட்டிகளில் ஆடமாட்டார் என்று பலரும் கூறி வருகிறார்கள். அதற்கு மற்றொரு முக்கிய காரணம், ஹர்திக் பண்டியா மற்றும் ராகுல்.

ஐபிஎல் அதிரடி
ஹர்திக் பண்டியா, ராகுல் இருவரும் அதற்கு முன்பு இருந்ததை காட்டிலும் ஐபிஎல் தொடரில் கலக்கலாக ஆடினர். ராகுல் பஞ்சாப் அணியின் துவக்க வீரராக ரன் மழை பொழிந்து மிரட்டினார். மறுபுறம், ஹர்திக் பண்டியா, மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆல்-ரவுண்டராக, தூணாக இருந்து பல போட்டிகளில் அணியை வெற்றி பெறச் செய்தார்.

இருவருக்கும் இடம் உறுதி
இதனால், இவர்கள் இருவரும் நிச்சயம் 11 வீரர்களில் ஒருவராக இடம் பெறுவர் என்ற கருத்து கூறப்படுகிறது. இதனால், விஜய் ஷங்கருக்கு அணியில் களமிறங்கும் வாய்ப்பு கிடைக்காத நிலை ஏற்படும்.

விஜய் நிலை என்ன?
ராகுல் துவக்க வீரர் என்றாலும், நான்காவது இடத்தில் அவரை களமிறக்க உள்ளதாக செய்திகள் கூறுகின்றன. ஹர்திக் பண்டியா ஆல்-ரவுண்டர் என்ற தன் இடத்தை தக்க வைத்துக் கொள்வார். இதனால், விஜய் ஷங்கர் பேட்டிங்கில் நான்காவது வரிசை அல்லது ஆல்-ரவுண்டர் என்ற இரண்டு இடத்தையும் பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

களமிறங்க முடியுமா?
ராகுல், ஹர்திக் பண்டியாவை மீறி விஜய் ஷங்கர் அணியில் களமிறங்க வேண்டும் என்றால், அவர்கள் இருவரில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டு ஆட முடியாத நிலை ஏற்பட்டால் அல்லது உலகக்கோப்பை தொடரின் பாதியில் அவர்கள் பார்ம் அவுட் ஆனதாக கேப்டன் கோலி கருதினால் மட்டுமே முடியும்.

ஒரு சிக்கல்
இதிலும் ஒரு சிக்கல் உள்ளது. மற்றொரு அனுபவ தமிழக வீரரான தினேஷ் கார்த்திக் சிறந்த பினிஷர் மற்றும் விக்கெட் கீப்பர் என்ற காரணத்திற்காகவே அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். தோனிக்கு மாற்று வீரர் என்றாலும், அவர் எந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனுக்கும் மாற்று வீரராக செயல்படுவார்.

சர்வதேச அனுபவம்
தினேஷ் கார்த்திக்கையும் மீறித் தான் விஜய் ஷங்கர் அணியில் வாய்ப்பு பெற முடியும். விஜய் ஷங்கருக்கு சர்வதேச போட்டிகள் அனுபவம் மிக, மிகக் குறைவு என்பதும் அவருக்கு பெரும் பின்னடைவாக அமையும்.

இடம் கிடைக்காது
ராகுல், ஹர்திக் பண்டியாவுக்கு காயம் ஏற்படும் வரை விஜய் ஷங்கருக்கு அணியில் இடம் கிடைக்காது என்பதே தற்போதுள்ள நிலைமை. எல்லாம் கோலி - ரவி சாஸ்திரி கையில் தான் உள்ளது. அவர்கள் ஏதாவது கணக்கு போட்டு விஜய் ஷங்கருக்கு வாய்ப்பு கொடுப்பார்களா? என பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications