Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அவருக்கு ஆதரவுதான் இருக்கு.. ஆனா தினேஷ் கார்த்திக் கிட்ட விஷயம் இருக்கு.. புட்டு புட்டு வைத்த கோலி

மும்பை : 2019 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் ரிஷப் பண்ட்டிற்கு பதில், தினேஷ் கார்த்திக் தேர்வு செய்யப்பட்டதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஐபிஎல் தொடரின் முடிவிலும், ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக்கை காட்டிலும் அதிக ரன்கள் குவித்துள்ளார் என சிலர் கூறி வருகின்றனர்.

ஏன் அவர் இல்லை?

ஏன் அவர் இல்லை?

இந்த நிலையில், உலகக்கோப்பை அணியில் ஏன் ரிஷப் பண்ட்டை விட்டு விட்டு தினேஷ் கார்த்திக் தேர்வு செய்யப்பட்டார் என்பது குறித்து பலரும் கேட்கும் கேள்விக்கு கேப்டன் கோலி விளக்கம் அளித்துள்ளார்.

தினேஷ் சரியாக இருப்பார்

தினேஷ் சரியாக இருப்பார்

உலகக்கோப்பை தொடரின் போது, தோனிக்கு ஒருவேளை காயம் ஏற்பட்டால் தினேஷ் கார்த்திக் தான் விக்கெட் கீப்பிங் செய்ய சரியாக இருப்பார். பினிஷராகவும் தினேஷ் கார்த்திக் சிறப்பாக செயல்பட்டுள்ளார். அழுத்தமான நேரங்களில், தன்னை நிரூபித்துள்ளார் என தினேஷ் கார்த்திக் தேர்வு செய்யப்பட்டதற்கான காரணத்தை கூறினார் கோலி.

பொறுப்பான விக்கெட் கீப்பர்

பொறுப்பான விக்கெட் கீப்பர்

கோலி சொல்ல வருவது இதுதான். தினேஷ் கார்த்திக் பொறுப்பான விக்கெட் கீப்பர் + பேட்ஸ்மேன். நல்ல பினிஷர். இதை கோலி குறிப்பிடுவதில் இருந்தே ரிஷப் பண்ட்டிடம் இந்த விஷயங்கள் இல்லை என்பதை நாம் தெரிந்து கொள்ளலாம்.

திட்டம் இல்லை

திட்டம் இல்லை

ரிஷப் பண்ட் சில போட்டிகளில் மட்டுமே ரன் குவிப்பார். எப்போது அதிரடி காட்ட வேண்டும், எப்போது நிதானம் காட்ட வேண்டும் என்ற திட்டம் இல்லாமல், வருவது, அடிப்பது, ஆட்டமிழந்து செல்வது என்பதே அவரின் கொள்கையாக உள்ளது.

எதிர்கால வீரர்

எதிர்கால வீரர்

ஆனால், தினேஷ் கார்த்திக் சூழ்நிலை அறிந்து பேட்டிங் செய்து வருகிறார். மேலும், சுமார் 20 ஆண்டு கால கிரிக்கெட் அனுபவம் கொண்டவர் தினேஷ் கார்த்திக். ரிஷப் பண்ட் எதிர்கால அதிரடி வீரர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அவரால் தோனி அல்லது தினேஷ் கார்த்திக் போல சூழ்நிலை அறிந்து ஆடமுடியுமா என்பது சந்தேகமே.

சரியான தேர்வு யார்?

சரியான தேர்வு யார்?

உலகக்கோப்பை அணிக்கு தோனிக்கு மாற்று விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தான் தேவை என்ற நிலையில், தினேஷ் கார்த்திக் தான் அதற்கு சரியான தேர்வு என தாங்கள் முடிவு செய்ததாக கூறுகிறார் கோலி. ரிஷப் பண்ட்டுக்கு ஆதரவு மட்டுமே உள்ளது. அணியில் தேர்வாக அது போதாது!!

Story first published: Wednesday, May 15, 2019, 18:00 [IST]
Other articles published on May 15, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+