Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விராட் கோலியும், அந்த வீரரும் வேற வேற மாதிரி.. ஆனா 2 பேருமே நல்லா ஆடுவாங்க!!

லண்டன் : கிரிக்கெட் உலகில் தற்போது சிறந்த பேட்ஸ்மேன் என்றால் அது விராட் கோலி தான்.

கோலிக்கு இணையாக பேசப்படும் மிகச் சில பேட்ஸ்மேன்களில் ஒருவரை, அவருடன் ஒப்பிட்டு பேசியுள்ளார் இங்கிலாந்து அதிரடி வீரர் ஜோஸ் பட்லர். ஐபிஎல் தொடரில் தான் பார்த்ததை வைத்து இந்த ஒப்பீட்டை செய்துள்ளார் பட்லர்.

World cup 2019 : Virat Kohli is a form batsman says Jos Buttler

ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஆடிய ஜோஸ் பட்லருக்கு, ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்தை அருகே பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. ஸ்டீவ் ஸ்மித் கடந்த ஆண்டு தடை செய்யும் முன்பு வரை உலகின் முன்னணி பேட்ஸ்மேனாக வலம் வந்தார்.

அதன் பின்னும், அவர் நீண்ட காலம் டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. விராட் கோலியை டெஸ்ட் போட்டிகளில் முந்தி ஆதிக்கம் செலுத்தி வந்தார் ஸ்டீவ் ஸ்மித். ஒருநாள் போட்டிகளில் இரு வீரர்களும் மாற்றி, மாற்றி ஆதிக்கம் செலுத்தி வந்தனர்.

இவர்கள் இருவரையும் பற்றி பேசிய ஜோஸ் பட்லர், ஸ்டீவ் ஸ்மித், விராட் கோலி இருவரும் சிறந்த வீரர்கள். இருவருக்கும் வேறு வேறு முறை உள்ளது. ஆனால், இருவரும் ஈர்த்துவிடுவார்கள் என்று கூறியுள்ளார்.

கோலி, ஸ்டீவ் ஸ்மித் பற்றி பேசும் ஜோஸ் பட்லரும் செம பார்மில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணியில் முக்கிய வீரராக ஜோஸ் பட்லர் இருப்பார் என ரிக்கி பாண்டிங் உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் கூறி வருகின்றனர்.

Story first published: Wednesday, May 22, 2019, 17:42 [IST]
Other articles published on May 22, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+