Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோலியை சச்சின் கூட ஒப்பிட மாட்டேன்.. ஆனா கோலி வேற லெவல்.. புகழ்ந்து தள்ளிய பிரையன் லாரா!

லண்டன் : தன் காலத்தில் தலைசிறந்த பேட்ஸ்மேனாக வலம் வந்த பிரையன் லாரா, இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியை இயந்திரம் (machine) என கூறியுள்ளார்.

தற்போதைய காலத்தில், கிரிக்கெட் உலகில் கலக்கி வரும் ஒரே பேட்ஸ்மேன் விராட் கோலி தான்.

வேறு சில பேட்ஸ்மேன்களையும் சிறந்த வீரர்கள் பட்டியலில் நாம் சேர்த்தாலும், கோலி அளவுக்கு ஒவ்வொரு போட்டியிலும் முத்திரை பதிக்கும் வீரர்கள் யாரும் இல்லை.

ஒப்பிட முடியாது

ஒப்பிட முடியாது

முன்னாள் ஜாம்பவான் பிரையன் லாரா, விராட் கோலி குறித்து பேசுகையில், ஒரு மனிதர் எப்போது பேட்டிங் செய்ய சென்றாலும், ரன் குவிக்கிறார் என புகழ்ந்து தள்ளினார். எனினும், சச்சினுடன் அவரை ஒப்பிட முடியாது என்றார்.

உதாரண வீரர்

உதாரண வீரர்

"சச்சின் என்னைப் பொறுத்தவரை எந்த காலத்திலும் சிறந்த பேட்ஸ்மேன். அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அதில் அவர் பெரும் சாதனை புரிந்தார். இவர்கள் இருவரையும் நான் ஒப்பிட விரும்பவில்லை. ஆனால், கோலிக்கு சிறப்பான திறமை உள்ளது. இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு உதாரணமாக இருக்கிறார்"

இயந்திரம்

இயந்திரம்

"அவர் ஒரு இயந்திரம். 80, 90களில் நாங்கள் இருந்ததை காட்டிலும் வித்தியாசமான கிரிக்கெட் வீரரை அவர் எடுத்து வந்துள்ளார். உடற்தகுதி முக்கியம் தான். ஆனால், இப்போது உள்ளது போல எப்போதும் அது முக்கியமானதாக இருந்ததில்லை"

ரன் மெஷின்

ரன் மெஷின்

"இப்போது ஆடும் கிரிக்கெட் அளவிற்கு, நீங்கள் எப்போதும் உடற்தகுதியுடன் இருக்க வேண்டும். கோலி ஜிம்மில் பயிற்சி செய்து, உடற்தகுதி தான் ஒரே வழி காட்டி வருகிறார். அவர் ஒரு ரன் மெஷின்" என்று கூறி முடித்தார் லாரா.

Story first published: Friday, May 24, 2019, 19:03 [IST]
Other articles published on May 24, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+