Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“அவன் அடிக்கிறான்; வேகமா போடு” ஆஸி,யில் தமிழில் கலக்கிய தினேஷ் கார்த்திக்.. அஸ்வின் தந்த பதில்!

பிரிஸ்பேன்: ஆஸ்திரேலிய அணியுடனான பயிற்சி போட்டியில் தினேஷ் கார்த்திக் ஸ்டம்பிற்கு பின் நின்று பல மொழிகளில் பேசிய ஆடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

டி20 உலகக்கோப்பை தொடருக்கான பயிற்சி போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் இன்று மோதின.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, இந்திய அணி நல்ல பேட்டிங்கை வெளிப்படுத்தியது.

இந்தியாவின் பேட்டிங்

இந்தியாவின் பேட்டிங்

இந்திய அணியில் ஓப்பனிங் வீரர் கே.எல்.ராகுல் 57 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 50 ரன்களும் அடித்து அசத்த மற்ற வீரர்கள் அதிரடி காட்ட முயன்று குறைந்த ரன்களுக்குள் விக்கெட்டை இழந்தனர். குறிப்பாக ரோகித் சர்மா 15, விராட் கோலி 19, ஹர்திக் பாண்ட்யா 2 என சொதப்பினர். கடைசி நேரத்தில் தினேஷ் கார்த்திக் அதிரடி காட்ட 20 ஓவர்களில் இந்திய அணி 7 விக்கெட்கள் இழப்புக்கு 186 ரன்களை குவித்தது.

தினேஷின் ஆடியோ

தினேஷின் ஆடியோ

இந்நிலையில் இந்த போட்டியில் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் செய்த விஷயங்கள் சுவாரஸ்யத்தை கொடுத்துள்ளது. தமிழக வீரர் அஸ்வின் பந்துவீச வரும் போது, தினேஷ் கார்த்திக் தொடர்ச்சியாக தமிழில் ஐடியா கொடுக்க, அதற்கு அஸ்வினும் பதில் கொடுத்த ஆடியோக்கள் ஸ்டம்ப் மைக்கில் பதிவானது. இதனை கேட்டு ஆஸ்திரேலிய பேட்டர்கள், குழம்பி நின்றதும் வேடிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

என்னதான் பேசினார்

என்னதான் பேசினார்

அஸ்வினின் ஓவரில் பேசிய தினேஷ் " பந்து ரிலீஸ் பன்னும் போது கைய மாத்து, அவன் ஈசியா கண்டு புடிச்சி அடிக்கிறான், மாத்திப்போடு, எனக்கூற இதுக்கு பதில் கொடுத்த அஸ்வின், " இதுமாறி மேட்ச்ல தான் ட்ரை பண்ணி பார்க்க முடியும், பார்ப்போம் எனக் கூறினார். தொடர்ந்து பேசிய தினேஷ், " அவன் கொஞ்சம் அடிச்சு ஆடட்டும், நீ குத்திப்போடு, வேகமா போடு என தொடர்ச்சியாக தமிழில் அவர் பேசியது சுவாரஸ்யத்தை கொடுத்தது.

3 மொழிகள்

3 மொழிகள்

தினேஷ் கார்த்திக் தமிழில் மட்டுமல்ல, இந்தி மொழியையும் மிகவும் சகஜமாக பேசத் தெரிந்தவர். இதனால் ஒரே சமயத்தில் இந்தி, ஆங்கிலம், தமிழ் என மாற்றி மாற்றி பேசி பேட்டரை என்ன செய்வதன்றே புரியாத அளவிற்கு குழப்பிவிட்டார். அவர் கூறியதை போன்றே முடிவுகளும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, October 17, 2022, 16:45 [IST]
Other articles published on Oct 17, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+