Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நீதான்யா மனுஷன்.. இன்று நவீன் உல் ஹக்.. அன்று ஸ்டீவ் ஸ்மித்.. ரசிகர்களிடம் சக வீரருக்காக நின்ற கோலி!

டெல்லி: ஆஃப்கானிஸ்தான் வீரர் நவீன் உல் ஹக்கிற்கு எதிரான டெல்லி ரசிகர்கள் ஆக்ரோஷமாக குரல் எழுப்பிய போது, அவர்களை விராட் கோலி கட்டுப்படுத்தியதை போல், 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரின் போது ஸ்டீவ் ஸ்மித்திற்கு ஆதரவாக கோலி பேசிய சம்பவம் நினைவுகூரப்பட்டு வருகிறது.

உலகக்கோப்பை தொடரில் ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இந்த போட்டி விராட் கோலியின் சொந்த மண்ணான டெல்லி மைதானத்தில் நடைபெற்றது. இதனால் விராட் கோலியின் ஒவ்வொரு அசைவுகளுக்கும் ரசிகர்கள் ஆர்ப்பரித்து கொண்டே இருந்தனர்.

World Cup 2023: Like Naveen Ul Haq, Virat Kohli voice out to fans for Australia Player Steve Smith

அதேபோல் ஐபிஎல் தொடரில் விராட் கோலியுடன் நேருக்கு நேர் மோதிய ஆஃப்கான் அணியின் நவீன் உல் ஹக்கை ரசிகர்கள் விமர்சிக்க தொடங்கினர். அவர் பயிற்சியில் ஈடுபட்ட போதே தொடங்கிய விராட் கோலி கோஷம், விராட் கோலிக்கு பந்துவீசும் போது விண்ணை தொட்டது. ரசிகர்கள் அனைவரும் ஒன்றாக விராட் கோலி என்று குரல் கொடுக்க, மைதானமே பாகுபலி மோடுக்கு சென்றது.

ஆனால் இதனை புரிந்துகொண்ட விராட் கோலி, டெல்லி ரசிகர்களை பார்த்து "விராட் கோலி" கோஷம் வேண்டாம் என்று சைகை செய்ததோடு, நவீன் உல் ஹக்கிற்கு ஆதரவளிக்கும் படியும் வேண்டுகோள் வைத்தார். தன்னுடன் மோதலில் ஈடுபட்ட வீரருக்கு பதிலடி கொடுக்காமல் அவருக்கு ஆதரவாக விராட் கோலி களத்தில் செயல்பட்ட சம்பவம் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இதனை புரிந்துகொண்ட நவீன் உல் ஹக், நேராக விராட் கோலியிடம் சென்று கை கொடுத்து தழுவிக் கொண்டார். இவர்கள் இருவரும் சிரித்து கொண்டே கட்டியணைத்து நட்பு பாராட்டிய சம்பவத்தை முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் வர்ணனையில் கூறினார். இந்த காட்சியே ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இதேபோல் 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரின் போது இங்கிலாந்து கிரிக்கெட் ரசிகர்கள் ஆஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித்திற்கு எதிராக கோஷம் எழுப்பினார்கள். ஆனால் அப்போது பேட்டிங் செய்து கொண்டிருந்த விராட் கோலி, உடனடியாக ரசிகர்களை பார்த்து அவருக்கு உற்சாகமாக கைதட்டி பாராட்டும் படி கேட்டுக் கொண்டார்.

என்னதான் எதிரணி வீரர்களுக்கு எதிராக ஆக்ரோஷமாக விளையாடினாலும், வம்புக்கு இழுத்தாலும் அவையனைத்தையும் களத்திலேயே விட்டு செல்லும் பழக்கத்தை விராட் கோலி வைத்துள்ளார். அதேபோல் சக வீரர்களுக்கு எதிராக ரசிகர்கள் அத்துமீறும் போது சாதாரணமாக கடந்து செல்லாமல் அவர்களுக்கு ஆதரவாக நின்று பேசும் பழக்கம் விராட் கோலியிடம் இருப்பது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

Story first published: Thursday, October 12, 2023, 9:18 [IST]
Other articles published on Oct 12, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+