Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs AFG: ஷர்துல் அல்லது முகமது ஷமி.. இந்திய அணியில் வாய்ப்பை பெறப்போவது யார்? ரோகித் சர்மா முடிவு

டெல்லி: ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ஷர்துல் தாக்கூர் அல்லது முகமது ஷமி இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

உலகக்கோப்பை தொடரின் 9வது லீக் போட்டியில் இந்தியா - ஆஃப்கானிஸ்தான் அணிகள் விளையாடுகின்றன. வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி படுதோல்வியை சந்தித்தது. அதேபோல் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் அபார வெற்றியை இந்திய அணி பெற்றுள்ளது. இதனால் இந்திய அணி தங்களது வெற்றிப் பயணத்தை தொடருமா அல்லது ஆஃப்கானிஸ்தான் அணி முதல் வெற்றியை பெறுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

World Cup 2023: Who will be in the Indian Playing XI between Shardul Thakur or Mohammad Shami against Afghanistan In Delhi

இந்த ஆட்டம் டெல்லி மைதானத்தில் நடக்கவுள்ளது. டெல்லி மைதானத்தின் பவுண்டரி தூரம் 55 மீட்டரில் இருந்து 70 மீட்டர் வரை தான் இருக்கும். இதன் காரணமாகவே இலங்கை அணிகளுக்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 428 ரன்களை குவித்தது. இதனால் இன்றைய ஆட்டத்திலும் நிச்சயம் மிகப்பெரிய ஸ்கோரை எதிர்பார்க்கலாம். இதனால் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் நிச்சயம் மாற்றங்கள் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இந்திய அணி 3 ஸ்பின்னர்களுடன் களமிறங்காமல், 2 ஸ்பின்னர்களுடன் களமிறங்க அதிக வாய்ப்புகள் உள்ளது. ஜடேஜா ஆல் ரவுண்டர் என்பதால், ஜடேஜா நிச்சயம் பிளேயிங் லெவனில் இருப்பார். இன்னொரு புறம் குல்தீப் யாதவ் முதன்மை ஸ்பின்னராக இருப்பதால், ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு ஓய்வு கொடுக்கப்படலாம். அவருக்கு பதிலாக இந்திய அணியில் வேகப்பந்துவீச்சாளரான முகமது ஷமி அல்லது ஷர்துல் தாக்கூர் இருவரில் ஒருவர் தேர்வு செய்யப்படலாம்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் முகமது ஷமி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி தனது ஃபார்மை நிரூபித்துள்ளார். இருப்பினும் அணியில் பும்ரா மற்றும் சிராஜ் இருவரும் இருப்பதால், முகமது ஷமி இடம்பெறுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாகும். இதனால் அஸ்வினின் நம்பர் 8 இடத்திற்கு ஷர்துல் தாக்கூர் இடம்பெற அதிக வாய்ப்புகள் உள்ளது. ஏனென்றால் ரன்கள் விட்டுக் கொடுத்தாலும், மிடில் ஓவர்களில் ஷர்துல் தாக்கூர் விக்கெட்டுகளை வீழ்த்தக் கூடியவர்.

அதேபோல் கீழ் வரிசையில் நன்றாக பேட்டிங் செய்ய கூடியவர். டெல்லி போன்ற பேட்டிங்கிற்கு சாதகமான மைதானங்களில் ஷர்துல் தாக்கூரால் சிறப்பாக பேட்டிங் செய்ய முடியும். இதனால் முகமது ஷமி அல்லது ஷர்துல் தாக்கூர் இருவரும் ஷர்துல் தாக்கூர் பெயரையே கேப்டன் ரோகித் சர்மா தேர்வு செய்வார் என்று பார்க்கப்படுகிறது.

Story first published: Wednesday, October 11, 2023, 0:11 [IST]
Other articles published on Oct 11, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+