Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியாவிடம் தோற்ற கோபம்.. தொலைக்காட்சி பெட்டிகளை தெருவில் போட்டு உடைத்த பாக். ரசிகர்கள்!

இஸ்லாமாபாத்: இந்தியாவுடன் அடைந்த உலக கோப்பை கிரிக்கெட் தோல்வியால் வெறுப்படைந்த பாகிஸ்தான் நாட்டு ரசிகர்கள் சிலர் தொலைக்காட்சி பெட்டிகளை தெருவில் போட்டு உடைத்த சம்பவம் கராச்சி நகரில் நடந்துள்ளது.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டத்தில் நேற்று இந்தியாவும், பாகிஸ்தானும் மோதின. அதில் இந்தியா 76 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஆறாவது தோல்வி

ஆறாவது தோல்வி

உலக கோப்பை தொடர்களில், அந்த அணி இந்தியாவுடன் பெறும் 6வது தோல்வி இதுவாகும். ஐந்து முறை பாகிஸ்தான் தோற்றிருந்த நிலையில், வலுவற்ற பவுலர்களை வைத்துள்ள இந்தியாவை இம்முறை எப்படியும் பாகிஸ்தான் வீழ்த்திவிடும் என்று பாகிஸ்தான் ரசிகர்கள் கருதியிருந்த நிலையில் ஆறாவதாக பாகிஸ்தானுக்கு, இந்திய வீரர்கள் தோல்வியையே பரிசாக அளித்தனர்.

பொது இடங்களில் டிவி திரை

பொது இடங்களில் டிவி திரை

இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை பார்க்க பாகிஸ்தான் நாட்டில் பல்வேறு பொது இடங்களில் பிரமாண்ட திரைகள் பொருத்தப்பட்டிருந்தன. அங்கெல்லாம் பாகிஸ்தான் அணி வீரர்களை போன்ற சீருடை அணிந்த ரசிகர்கள் குவிந்து ஆட்டத்தை ரசித்தனர்.

வீரர்களை திட்டி தீர்த்த ரசிகர்கள்

வீரர்களை திட்டி தீர்த்த ரசிகர்கள்

இந்நிலையில் பாகிஸ்தான் பரிதாபமாக தோற்றதும், ரசிகர்கள் சோகமாக கலைந்து சென்றனர். சிலர் பாகிஸ்தான் வீரர்களை வசைமாறி பொழிந்தபடி சென்றனர்.

டிவிகள் உடைப்பு

டிவிகள் உடைப்பு

கராச்சியில் வீட்டில் கிரிக்கெட் பார்த்துக்கொண்டிருந்த ரசிகர்கள் சிலர் தங்கள் தொலைக்காட்சி பெட்டிகளை தெருவில் கொண்டுவந்து போட்டு உடைத்தனர். பாகிஸ்தான் டிவி சேனல் ஒன்று இந்த செய்தியை வீடியோவுடன் ஒளிபரப்பியது. இதனிடையே எல்லையிலும் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி சுடத் தொடங்கியுள்ளது.

Story first published: Monday, February 16, 2015, 9:59 [IST]
Other articles published on Feb 16, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+