Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஜிம்பாப்வேயை பந்து வீச்சில் நொறுக்கிய ஆஸி.-91 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

Australia Team
அகமதாபாத்: பேட்டிங்கில் சற்று தடுமாறினாலும், பந்து வீச்சில் தனது விஸ்வரூபத்தைக் காட்டிய ஆஸ்திரேலிய அணி, 91 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேயை வீழ்த்தியது.

அகமதாபாத்தில் நேற்று நடந்த உலகக் கோப்பைப் போட்டியில் ஆஸ்திரேலியாவும், ஜிம்பாப்வேயும் மோதின. டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா சற்று தடுமாற்றத்துடன் ஆடி 262 ரன்களைக் குவித்தது.

அதன் பின்னர் ஆட வந்த ஜிம்பாப்வே, ஆஸ்திரேலியாவின் வேகப் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. குறிப்பாக மிட்சல் ஜான்சன் அபாரமாக பந்து வீசினார். அவரது வேகத்தி்ல ஜிம்பாப்வேயின் விக்கெட்கள் மளமளவென சரிந்தன.

ஜிம்பாப்வே அணியில் அதிகபட்சமாக கிரெமர் 37 ரன்களைச் சேர்த்தார். இறுதியில், 46.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 171 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தது ஜிம்பாப்வே.

மிட்சல் ஜான்சன் 4 விக்கெட்களையும், ஷான் டெய்ட், ஜேசன் கிரஸ்ஜா தலா 2 விக்கெட்களையும் சாய்த்தனர்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:44 [IST]
Other articles published on Dec 7, 2011
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+