உலகக் கோப்பைக் கிரிக்கெட்- இதுவரை...

1987, 1999, 2003, 2007 ஆகிய நான்கு முறையும் ஆஸ்திரேலியாவே வாகை சூடியது. மேற்கு இந்தியத் தீவுகள் அணி 1975ல் நடந்த முதல் போட்டியிலும், அடுத்து 1979ல் நடந்த 2வது தொடரிலும் வாகை சூடியது.
1983ல் நடந்த மூன்றாவது போட்டியில் இந்தியா அதிரடியாக, அனைவரும் வியக்கும் வகையில் கோப்பையை வென்று புதிய வரலாறு படைத்தது.
1992ல் நடந்த போட்டியில் பட்டம் பாகிஸ்தானுக்குப் போனது. 1996ல் இலங்கை கோப்பையை வென்றெடுத்தது.
இருப்பினும் கிரிக்கெட்டின் தாயகமான இங்கிலாந்து இதுவரை ஒருமுறை கூட சாம்பியன் ஆனதில்லை என்பது மிகப் பெரிய ஆச்சரியமான விஷயம். அதேபோல பலம் வாய்ந்த தென் ஆப்பிரிக்காவும் இதுவரை கோப்பையை வெல்ல முடியவில்லை. அதேபோல நியூசிலாந்து அணிக்கும் கோப்பை வெறும் கனவாகவே உள்ளது.
| கடந்த உலகக் கோப்பை போட்டி (பைனல்) முடிவுகள் | ||||
| ஆண்டு | தேதி | இடம் | இறுதிப் போட்டி | முடிவு |
| 1975 | ஜூன் 7-ஜூன் 21 | இங்கிலாந்து | மே.இ.vs ஆஸி | மேற்கு இந்தியத் தீவுகள் 17 ரன் வித்தியாசத்தில் வெற்றி |
| 1979 | ஜூன் 9-ஜூன் 23 | இங்கிலாந்து | இங்கிலாந்து vs மே.இ. | மேற்கு இந்தியத் தீவுகள் 92 ரன் வித்தியாசத்தில் வெற்றி |
| 1983 | ஜூன் 9-ஜூன் 25 | இங்கிலாந்து | இந்தியா vs மேஇ. | இந்தியா 43 ரன் வித்தியாசத்தில் வெற்றி |
| 1987 | அக்டோபர் 8-நவ 8 | இந்தியா,பாக். | ஆஸி. vs இங்கிலாந்து | ஆஸி. 7 ரன் வித்தியாசத்தில் வெற்றி |
| 1992 | பிப்.22 - மார்ச் 25 | ஆஸி, நியூசிலாந்து | பாக்.vs இங்கிலாந்து | பாக். 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி |
| 1996 | பிப்.14- மார்ச் 17 | இந்தியா, பாக்., இலங்கை | ஆஸி vs இலங்கை | இலங்கை 7 வி. வித்தியாசத்தில் வெற்றி |
| 1999 | மே 14-ஜூன் 20 | இங்கிலாந்து, அயர்லாந்து, நெதர்லாந்து, ஸ்காட்லாந்து | ஆஸி vs பாக் | ஆஸி. 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி |
| 2003 | பிப் 9-மார்ச் 23 | கென்யா, தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே | ஆஸி vs இந்தியா | ஆஸி. 125 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி |
| 2007 | மார்ச் 13-ஏப்ரல் 28 | மேற்கு இந்தியத் தீவுகள் | இலங்கை vs ஆஸி. | ஆஸி. 53 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி |
Story first published: Wednesday, December 7, 2011, 18:44 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications