நான் நீக்கப்பட்டதைக் கேட்டதும் இதயம் நொறுங்கிப் போய் விட்டது-ஸ்ரீசாந்த்

உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதில் ஸ்ரீசாந்த் சேர்க்கப்படவில்லை. அவருக்குப் பதில் ஆசிஷ் நேஹ்ராவை சேர்த்து விட்டனர்.
இதுகுறித்து ஸ்ரீசாந்த் வருத்தமும், அதிர்ச்சியும் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள ட்விட்டர் செய்தியில், நான் இதயம் நொறுங்கிப் போயுள்ளேன். என் மீது எனக்கு மிகவும் நம்பிக்கை இருந்தது. நம்பிக்கை இல்லாத மனிதர்களால் சவால்களை சந்திக்க முடியாது, சந்திக்க பயப்படுவார்கள் என்பது எனது எண்ணம். நான் நம்பிக்கையுடன் இருந்தேன் என்று கூறியுள்ளார் ஸ்ரீசாந்த்.
நல்ல அணியையே தேர்வு செய்துள்ளோம்-ஸ்ரீகாந்த்
இதற்கிடையே, அணித் தேர்வு குறித்து ஸ்ரீகாந்த் கூறுகையில்ஸ முடிந்தவரை நல்ல அணியை தேர்வு செய்துள்ளோம். சிறந்த வீரர்களே அணியில் இடம் பெற்றுள்ளனர்.
இந்தியா உலகக் கோப்பையை வென்று 28 ஆண்டுகளாகி விட்டது. மீண்டும் உலகக் கோப்பையை வெல்லும் இந்தியர்களின் கனவை இந்த அணி நனவாக்கும் என்று நம்புகிறோம்.
நாங்கள் தேர்வு செய்ததிலேயே சிறந்த அணி இதுதான் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது என்றார் ஸ்ரீகாந்த்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:44 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications