Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பண்டர் 46.. கடவுள் 45..இன்சி 35.. உலக கோப்பையின் மாரத்தான் பிளேயர்கள்!

சிட்னி: கிரிக்கெட் வீரர்கள் ஒவ்வொருவருக்குமே உலக கோப்பையில் விளையாடுவது என்பது ஒரு கனவு. அதுபோன்ற உலக கோப்பை தொடரில் மிக அதிக போட்டிகளில் விளையாடியவர்கள் பாக்கியம் செய்தவர்களாகவே இருக்க வேண்டுமல்லவா.. அடுத்தடுத்து உலக கோப்பை போட்டிகளில் அந்தந்த நாடுகள் தேர்ந்தெடுக்க வீரர்களிடம் இருந்த அளப்பறிய திறமையும் முக்கிய காரணம். அப்படிப்பட்ட திறமையான, அதிருஷ்டசாலிகளின் மாரத்தான் ஓட்டம் பற்றிய, பற்றிய ஒரு பார்வை:

பண்டருக்கு முதலிடம்

பண்டருக்கு முதலிடம்

ஆஸ்திரேலிய வீரர், ரிக்கி பாண்டிங்தான் (செல்ல பெயர் பண்டர்) உலக கோப்பை வரலாற்றிலேயே அதிக போட்டிகளில் விளையாடியவர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர். 1996 முதல் 2011 உலக கோப்பை தொடர் வரை மொத்தம் 46 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

மாஸ்டருக்கு 2வது இடம்

மாஸ்டருக்கு 2வது இடம்

மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் 1992 முதல் 2011 உலக கோப்பை தொடர்கள் வரை மொத்தம் 45 போட்டிகளில் விளையாடியுள்ளார். ஆஸ்திரேலிய அணி எப்போதுமே சீராக விளையாடியதால் ரிக்கி பாண்டிங்கால் அதிக போட்டிகளில் ஆட முடிந்தது. சச்சின் 1992 முதல் விளையாடி வந்தாலும், இந்தியா லீக் சுற்றிலேயே பல முறை வெளியேறும் சூழல் ஏற்பட்டதால் ஒரு போட்டி வித்தியாசத்தில் சச்சின் 2வது இடம் பிடித்துள்ளார்.

முரளி மூன்றாவது

முரளி மூன்றாவது

இலங்கை வீரர் முத்தையா முரளிதரன் 1996 முதல் 2011 வரையிலான உலக கோப்பை போட்டிகளில் மொத்தம் 40 ஆட்டங்களில் பங்கேற்றுள்ளார்.

மெக்ராத்

மெக்ராத்

ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் கிளென் மெக்ராத், 1996 உலக கோப்பை முதல் 2007 வரை மொத்தம் 39 போட்டிகளில் ஆடி இப்பட்டியலில் 4வது இடத்தை பிடித்துள்ளார்.

ஜெயசூர்யா

ஜெயசூர்யா

இலங்கையின் அதிரடி ஆட்டக்காரர் சனத் ஜெயசூர்யா 1992 முதல் 2007 வரையிலான உலக கோப்பை போட்டிகளில் மொத்தம் 38 ஆட்டங்களில் பங்கேற்றுள்ளார்.

அக்ரம்

அக்ரம்

1987ம் ஆண்டு முதல் 2003 உலக கோப்பை வரையில் ஆடிய பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர் வாசிம் அக்ரம் 38 போட்டிகளில் பங்கேற்றார்.

ஜாக் கல்லீஸ்

ஜாக் கல்லீஸ்

1996 முதல் 2011 வரை ஆடிய தென் ஆப்பிரிக்காவின் ஆல் ரவுண்டர் ஜாக் கல்லீஸ் 36 போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.

அரவிந்த டி சில்வா

அரவிந்த டி சில்வா

1987 முதல் 2003 வரையில் மொத்தம் 35 போட்டிகளில் இலங்கை பேட்ஸ்மேன் அரவிந்த டி சில்வா பங்கேற்றார்.

இன்சமாம்

இன்சமாம்

1992 முதல் 2007 வரையிலான உலக கோப்பைகளில் மொத்தம் 35 போட்டிகளில் பங்கேற்றார் பாகிஸ்தானின் மிடில் ஆர்டர் ஜாம்பவான் இன்சமாம் உல் ஹக் (செல்ல பெயர் இன்சி).

லாரா

லாரா

1992 முதல் 2007 வரையிலான உலக கோப்பைகளில் மொத்தம் 34 போட்டிகளில் பங்கேற்றார் மே.இ.தீவுகளின் ஜாம்பவான் பேட்ஸ்மேன் பிரையன் லாரா.

ஸ்ரீநாத்

ஸ்ரீநாத்

இந்தியாவின் வேகப்பந்து நட்சத்திரமாக விளங்கிய ஜவகல் ஸ்ரீநாத் 1992 முதல் 2003 உலக கோப்பை வரை மொத்தம் 34 உலக கோப்பை போட்டிகளில் பங்கேற்கும் அதிருஷ்டத்தை பெற்றார்.

Story first published: Saturday, February 14, 2015, 9:26 [IST]
Other articles published on Feb 14, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+