Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஜெயவர்த்தனே விளாசல்-கனடாவை வீழ்த்தி 210 ரன் வித்தியாசத்தில் வென்றது இலங்கை

Mahela Jayawardene
ஹம்பந்தோட்டா: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், தனது முதல் ஆட்டத்தில் கனடாவை 201 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இலங்கை.

இலங்கையின் ஹம்பந்தோட்டா மைதானத்தில் நேற்று இலங்கைக்கும், கனடாவுக்கும் இடையிலான உலகக் கோப்பை சுற்றுப் போட்டி நடந்தது. இலங்கையின் முதல் போட்டி இது என்பதால் ரசிகர்கள் திரண்டு வந்திருந்தனர்.

இப்போட்டியில் முதலில் பேட் செய்த இலங்கை 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 332 ரன்களைக் குவித்தது. அந்த அணியின் கேப்டன் சங்கக்காரா 92 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஆனால் மஹளா ஜெயவர்த்தனே சிறப்பாக ஆடி 100 ரன்களைக் குவித்தார். தில்ஷனின் பங்கு 50.

கனடா தரப்பில் ஜான் டேவிசனும், ஹர்வீர் பைத்வானும் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.

பின்னர் ஆடிய கனடாவால் 36.5 ஓவர்கள் வரை நிலைக்க முடிந்ததே தவிர ரன்களைக் குவிக்க முடியவில்லை. அனைத்து விக்கெட்களையும் இழந்த அந்த அணி 122 ரன்களை மட்டுமே எடுத்தது.

சீமா 37 ரன்களும், கேப்டன் ஆசிஷ் பகாய் 22 ரன்களும் எடுத்தனர். குலசேகரா அபாரமாக பந்து வீசி 3 விக்கெட்களைச் சாய்த்தால். முத்தையா முரளீதரன் 2 விக்கெட்களை வீழ்த்தினார்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:44 [IST]
Other articles published on Dec 7, 2011
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+