நேப்பியார்: நியூசிலாந்து முன்னாள் கேப்டனும், சுழற்பந்து வீரருமான வெட்டோரி ஒருநாள் போட்டிகளில் 302 விக்கெட்டுகளை வீழ்த்திய முதலாவது நியூசிலாந்து வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் வெட்டோரி அபாரமாக பந்து வீசி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இதில் 2-வது விக்கெட்டை எடுத்தபோது அவர் 300-வது விக்கெட்டை கைப்பற்றினார். 36 வயதான வெட்டோரி 290 ஒருநாள் போட்டியில் விளையாடி 302 விக்கெட் எடுத்துள்ளார்.
இதன்மூலம் ஒருநாள் போட்டியில் 300 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய முதல் நியூசிலாந்து வீரர் என்ற சாதனையை அவர் புரிந்தார். அவர் 8-வது முறையாக 4 விக்கெட்டை எடுத்துள்ளார்.
7 ரன் கொடுத்து 5 விக்கெட் எடுத்தது அவரது சிறந்த பந்துவீச்சு. 300 விக்கெட் கைப்பற்றிய 12-வது வீரர் வெட்டோரி ஆவார். அவருக்கு அடுத்தப்படியாக உள்ள நியூசிலாந்து வீரர்கள் மில்ஸ் 240 விக்கெட் எடுத்துள்ளார்.