For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பயிற்சிக்கு வராத கிறிஸ் கெய்ல்.. இந்தியாவுக்கு எதிரான போட்டியில் களமிறங்குவது சந்தேகம்!

By Veera Kumar

பெர்த்: முதுகு வலியால் அவதிப்படும் வெஸ்ட் இண்டீஸ் அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

உலக கோப்பையில், ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டியில் இரட்டை சதம் அடித்து அசத்தியவர் வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெய்ல்., இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் வரும் 6ம்தேதி உலக கோப்பையில் மோத உள்ளன. கெய்ல் புயலை சமாளிக்க இந்திய அணி வியூகம் வகுத்து வருகிறது.

World cup: Doubts over Gayle's fitness

இந்நிலையில், கெய்ல் காயம் அடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவை எதிர்கொள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி தீவிர வலைப் பயிற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில், கெய்ல் இதுவரை பயிற்சிகளில் பங்கேற்கவில்லை.

பெர்த் நகரில் ஆடல், பாடல் என பொழுது போக்கி வருகிறார் கெய்ல். இதற்கு காரணம், கெய்லுக்கு இருக்கும் முதுகு வலிதான் என்று கூறப்படுகிறது. அண்மை காலமாகவே, கெய்ல் முதுகு வலியால் பாதிக்கப்பட்டிருந்தாலும், இப்போது வலி சற்று அதிகரித்துள்ளதாம்.

அதேநேரம் வெஸ்ட் இண்டீஸ் இன்னும் காலிறுதிக்கு தகுதி பெறவில்லை என்பதை கருத்தில் கொண்டு இந்தியாவுக்கு எதிரான போட்டியில் கிறிஸ் கெய்லை அந்த அணி களமிறக்கும் என்று கூறப்படுகிறது.

Story first published: Tuesday, March 3, 2015, 16:58 [IST]
Other articles published on Mar 3, 2015
English summary
Chris Gayle may have set a record by slamming a double in this World Cup, but all is not well with this Caribbean batsman. The swashbuckling opener skipped the practice on Tuesday for the third time owing to a back problem.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+