தோத்துட்டா.. தோனி தான் காரணமா? இதெல்லாம் உங்க கண்ணுக்கு தெரியாதா? சீறும் அந்த சிங்
Recommended Video
மும்பை:உலக கோப்பை தோல்விக்கு தோனி மட்டுமே காரணமல்ல என்று ஹர்பஜன் சிங் கூறியிருக்கிறார்.
அண்மையில் முடிந்த உலக கோப்பை தொடரில் இந்தியா அரையிறுதியோடு வெளியேறியது. தோல்விக்கு பிறகு தோனியை அனைவரும் காரணம் காட்டுகின்றனர். மேலும் அவரை ஓய்வு பெறச் சொல்லியும் வற்புறுத்தி வருகின்றனர்.
அவரும் இப்போதைக்கு தமது ஓய்வு குறித்து கருத்து தெரிவிக்க மறுத்து வருகிறார். வரப்போகிற வெஸ்ட் இண்டீஸ் தொடரில் தோனி இடம்பெறுவாரா என்பது குறித்து உறுதியான தகவல் வெளியாகவில்லை. இதையடுத்து, கிட்டத் தட்ட அவரது கிரிக்கெட் சாம்ராஜ்யம் முடிவுக்கு வருகிறது என்றும் பலரும் கூறி வருகின்றனர்.

தோல்வி ஏன்?
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங் உலக கோப்பை தொடரில் இந்தியாவின் தோல்வி குறித்து கருத்து கூறியுள்ளார். அவர் கூறியிருப்பதாவது: உலக கோப்பையில் தோனியின் ஆட்டம் மெதுவாக இருந்தாலும் அவர் தான் தோல்விக்கு காரணம் என்று கை காட்டுவது சரியில்லை.

சுழற்பந்து வீச்சாளர்கள்
அந்த தொடரில் இந்திய அணி 2 சுழற்பந்து வீச்சாளர்களுடன் விளையாடியது. மற்ற அணிகள் ஒரு சுழல் பந்துவீச்சாளர் விளையாடிய நிலையில், இங்கு 2 பேர் விளையாடியது தவறு. 2 ஆண்டுகளாக இந்தியாவின் மிகச்சிறந்த வீரர்களாக திகழும் சாஹல், குல்தீப் யாதவ் ஆகியோர் இந்த தொடரில் சாதிக்கவில்லை.

ஏன் பயன்படுத்தவில்லை?
மேலும் குல்தீப் 10 போட்டிகளில் விளையாடி 6 விக்கெட்டுகளை எடுத்தார். சாஹல் 8 போட்டிகளில் விளையாடி 12 விக்கெட்டுகளை எடுத்தார். இவர்கள் இருவரையும் இந்திய அணி சிறப்பாக பயன்படுத்தவில்லை. அது ஏன் என்று தெரியவில்லை.

தோல்வி பின்னடைவு
இருவரும் நிச்சயம் இந்திய அணிக்கு சிறப்பான வெற்றியை தேடிக் கொண்டிருக்க வேண்டும். ஆனால் இருவரையும் இந்திய அணி சரியாக கையாள வில்லை. இதுவே இந்த தொடரில் இந்திய அணி தோற்கவும், கோப்பையை இழப்பதற்கு பெரிய பின்னடைவாகவும் இருந்தது என்றார்.


Click it and Unblock the Notifications