நாளை இந்தியா-ஆஸி. போட்டி, ஆபீஸ் வேற இருக்கே: நான் லீவு, எனக்கு காய்ச்சல்!!!
டெல்லி: உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்தியா விளையாடுவதை பார்க்க பலரும் நாளை விடுப்பு எடுக்க திட்டமிட்டுள்ளனர்.
உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் மோதும் ஆட்டம் நாளை சிட்னி நகரில் நடைபெற உள்ளது. இந்த போட்டியை காண இந்தியர்கள் மிகவும் ஆவலாக உள்ளனர். ஆனால் நாளை அலுவலகம் உள்ளதால் வீட்டில் ஹாயாக அமர்ந்து போட்டியை காண முடியாது அல்லவா. இதனால் நாளை அலுவலகத்திற்கு செல்லாமல் விடுப்பு எடுக்க பலரும் திட்டமிட்டுள்ளனர்.
நாளை விடுப்பு எடுப்பது குறித்து நாடு தழுவிய அளவில் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டுள்ளது.

உடல்நலக்குறைவு
கருத்துக்கணிப்பில் அலுவலகம் செல்லும் 6 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். அதில் 34 சதவீதம் பேர் உடல்நலக் குறைவு என்று கூறி நாளை விடுப்பு எடுக்க உள்ளனர்.

திருட்டு
உடல்நலக்குறைவு என்று கூறுவது வழக்கம் தான். ஆனால் கருத்துக்கணிப்பில் கலந்து கொண்ட 2 சதவீதம் பேர் தங்கள் வீடுகளில் திருடு போய்விட்டது என்று கூறி விடுப்பு எடுக்க திட்டமிட்டுள்ளனர்.

வேலை
60 சதவீதம் பேரோ நாளை கிரிக்கெட் போட்டி இருந்தாலும் தாங்கள் அலுவலகத்திற்கு சென்று வேலை பார்க்க உள்ளதாக தெரிவித்துள்ளனர். (சின்சியர் சிகாமணிகள்).

லீவு
ஒரு சில நிறுவனங்கள் தங்கள் ஊழியர்கள் டோணி அணி விளையாடுவதை பார்க்க ஏதுவாக நாளை விடுப்பு அறிவித்துள்ளன.


Click it and Unblock the Notifications