Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கெய்ல் இரட்டை சதம் அடித்ததற்கும், இந்தியாவுக்கும் என்ன தொடர்பு?

கான்பெர்ரா: ஜிம்பாப்வேக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் கெய்ல் இரட்டை சதம் அடித்தது இந்தியாவில் செய்யப்பட்ட பேட்டால் தான் என்பது உங்களுக்கு தெரியுமா?

உலகக் கோப்பை போட்டிகளில் ஜிம்பாப்வே, மேற்கிந்திய தீவுகள் அணி மோதிய ஆட்டம் ஆஸ்திரேலியாவின் கான்பெர்ரா நகரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த போட்டியில் கெய்ல் புயலாக மாறி பேட்டிங் செய்தார்.

உலகக் கோப்பை போட்டியில் அவர் ஏதோ ஐபிஎல் போட்டி போன்று விளாசித் தள்ளினார்

இரட்டை சதம்

இரட்டை சதம்

நேற்றைய போட்டியில் கிறிஸ் கெய்ல் இரட்டை சதம் அடித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். அவர் 215 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார்.

இந்திய பேட்

இந்திய பேட்

கெய்ல் இரட்டை சதம் அடித்த பேட் இந்தியாவில் செய்யப்பட்டது. பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் உள்ள ஸ்பார்டன் ஸ்போர்ட்ஸ் இன்டஸ்ட்ரீஸில் தயாரிக்கப்பட்ட பேட்டை வைத்து தான் கெய்ல் நேற்று கான்பெர்ராவில் புயலைக் கிளப்பினார்.

வேகம்

வேகம்

உலகக் கோப்பை போட்டிகளில் அதிவேகமாக அடிக்கப்பட்ட இரட்டை சதமும் கெய்ல் அடித்தது தான். அவர் 138 பந்துகளில் 200 ரன்கள் எடுத்தார்.

நன்றி

நன்றி

நன்றி ஸாப்ர்டன் குனால். குடும்பத்தார், நண்பர்கள், ரசிகர்கள், அணியினரின் அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி என்று கெய்ல் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

ஸ்பார்டன் பேட்

ஸ்பார்டன் பேட்

கெய்ல் கடந்த 2 ஆண்டுகளாக ஸ்பார்டன் பேட்டுகளை தான் பயன்படுத்தி வருகிறர். அவர் 1,250 கிராம் முதல் 1,300 கிராம் எடையுள்ள பேட்களே வேண்டும் என்று கேட்டு வாங்குகிறார். அவருக்கு 15 பேட்கள் அனுப்பி வைத்தோம். அதில் பிடித்ததை வைத்து அவர் ஆடியுள்ளார் என்று ஸ்பார்டன் ஸ்போர்ட்ஸ் அதிகாரி அமித் ஷர்மா தெரிவித்துள்ளார். தற்போது தான் முதல்முறையாக எங்களின் பேட்டுகள் உலகக் கோப்பை போட்டிகளில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

டோணி

டோணி

டோணி, ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க், இங்கிலாந்து கேப்டன் இயன் மார்கன், மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் ட்வெய்ன் பிராவோ, வேகப்பந்து வீச்சாளர் மிட்சல் ஜான்சன் ஆகியோரும் ஸ்பார்டன் பேட்களை வாங்கியுள்ளனர்.

Story first published: Wednesday, February 25, 2015, 12:24 [IST]
Other articles published on Feb 25, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+