உலகக் கோப்பை கிரிக்கெட் இந்தியா 370 ரன்கள் குவிப்பு... ஷேவாக் 175, கோஹ்லி 100

இந்தியா- வங்காளதேசம் மோதும் முதல் போட்டி இன்று மிர்பூர் தேசிய ஸ்டேடியத்தில் நடக்கிறது. டாஸ் வென்ற வங்காளதேசம் பீல்டிங்கை தேர்வு செய்தது.
இந்திய அணியில் சச்சின் தெண்டுல்கர், ஷேவாக், கம்பீர், வீரட் கோக்லி, யுவ்ராஜ் சிங், தோனி, யூசுப் பதான், ஹர்பஜன் சிங், ஸ்ரீசந்த், ஜாகீர்கான், முனாப் பட்டேல் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். ரெய்னா சேர்க்கப்படவில்லை.
3 வேகப்பந்து வீச்சாளர் மற்றும் ஒரு சுழற்பந்து வீச்சாளர் இந்திய அணியில் இடம் பெற்றுள்ளனர்.
தொடக்க ஆட்டக்காரர்களாக ஷேவாக்கும், தெண்டுல்கரும் களம் இறங்கினர். முதல் ஓவரை ஷேவாக் சந்தித்தார். முதல் பந்திலே பவுண்டரியுடன் ரன் கணக்கைத் துவக்கினார். ஷேவாக்கும் தெண்டுல்கரும் அதிரடியாக விளையாடி ரன் சேர்த்தனர்.
இதனால் இந்தியாவின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. இந்தியா 8.5 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 50 ரன்னை தொட்டது. சிறப்பாக விளையாடிய சச்சின் 28 ரன்னில் ரன் அவுட்ஆனார். அப்போது இந்தியாவின் ஸ்கோர் 69 ஆக இருந்தது.
அடுத்து ஷேவாக்குடன் கம்பீர் ஜோடி சேர்ந்தார். ஷேவாக் சிறப்பாக விளையாடி 45 பந்தில் 7 பவுண்டரி, 1 சிக்சருடன் அரைசதம் அடித்தார். இந்தியா 14.3 ஓவரில் 100 ரன்களைத் தொட்டது. கம்பீர் 33 ரன்கள் எடுத்திருக்கும்போது அவுட் ஆனார். அப்போது இந்தியா 23.2 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 152 ரன் எடுத்திருந்தது.
அடுத்து 3-வது விக்கெட் ஜோடியாக ஷேவாக்குடன் வீராட் கோலி ஜோடி சேர்ந்தார். இருவரும் வங்காளதேச பந்துவீச்சை அனைத்து திசைகளிலும் சிதறடித்தனர். ஷேவாக் சிறப்பாக விளையாடி 94 பந்தில் 9 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சருடன் சதம் அடித்தார்.
அப்போது இந்தியா 31.2 ஓவரில் 200 ரன்னை தொட்டது. சிறப்பாக விளையாடி வந்த சேவாக் 175 ரன் குவித்து அவுட் ஆனார். அவரது ஸ்கோரில் 5 சிக்ஸர்கள், 14 பவுண்டரிகள் அடங்கும்.
அடுத்து யூசுப் பதான் களம் இறங்கினார். மறுமுனைௌயில் விராட் கோஹ்லியும் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். கடைசி பந்தில் யூசுப்பதான் அவுட் ஆனார். இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 370 ரன் குவித்தது.
வங்கதேசம் தரப்பில் ஷபியுல் இஸ்லாம், ஷகிப் அல் அஸன், மஹ்மதுல்லா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
Story first published: Friday, February 19, 2016, 14:24 [IST]
Other articles published on Feb 19, 2016


Click it and Unblock the Notifications