Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலகக் கோப்பை: பாகிஸ்தானிடம் தோற்றால் எங்கள் வீடுகள் மீது கல்வீச்சு தான்- ஹர்பஜன் சிங்

மும்பை: பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்தால் மக்கள் எப்படி தங்கள் வீட்டை தாக்குவார்கள் என்பது குறித்து கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இந்தியா பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்தால் ரசிகர்கள் தங்கள் வீடுகள் மீது கற்கள் வீசித் தாக்குதல் நடத்துவார்கள் என்று ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். இம்முறை வரும் 15ம் தேதி ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு நகரில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன. இத்தகைய போட்டிகள் எவ்வளவு கடினம் என்பது பற்றி ஹர்பஜன் சிங்கும், பாகிஸ்தான் வீரர் சோயப் அக்தரும் தெரிவித்துள்ளனர்.

2011ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்தார் ஹர்பஜன் சிங். ஆனால் இம்முறை அவர் உலகக் கோப்பையில் விளையாடும் இந்திய அணியில் இல்லை. இந்நிலையில் போட்டிகள் குறித்து ஹர்பஜன் கூறுகையில்,

டென்ஷன்

டென்ஷன்

பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடும்போது எல்லாம் உடை மாற்றும் அறையில் வீரர்கள் டென்ஷனாக இருப்பார்கள். உடை மாற்றும் அறையே அப்படி என்றால் ஹோட்டல் அறையில் எவ்ளவு டென்ஷன் இருக்கும் என்பதை கூறவா வேண்டும்.

பயம்

பயம்

கடந்த உலகக் கோப்பை போட்டியின்போது மொஹாலியில் பாகிஸ்தானுக்கு எதிரான அரையிறுதி போட்டி நடப்பதற்கு முந்தைய நாள் இரவு என்னால் தூங்கவே முடியவில்லை. தோல்வி அடைந்தால் என்னவாகும் என்ற பயத்திலேயே தூக்கம் வரவில்லை.

தூக்கம்

தூக்கம்

மறுநாள் நல்லவேளை வெற்றி பெற்றோம். ஆனால் அன்று இரவும் தூங்க முடியவில்லை. காரணம் அதீத மகிழ்ச்சி. பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்தால் மீடியாக்கள் ஒருபக்கம் வறுத்தெடுக்கும், ரசிகர்கள் மறுபக்கம் எங்கள் வீடுகளின் மீது கல்வீசித் தாக்குதல் நடத்துவார்கள் என்றார் ஹர்பஜன்.

அக்தர்

அக்தர்

பாகிஸ்தான் வீரர் சோயப் அக்தர் கூறுகையில், இந்தியாவுக்கு எதிரான போட்டி என்பது பலருக்கு மிகப் பெரிய விஷயம். பலருக்கு இந்த போட்டி உலகக் கோப்பை போட்டியை விட பெரியது. அதிகமாக டென்ஷன் இருக்கும். வீரர்கள் தங்களால் முடிந்த வரை அதிக முயற்சி எடுத்து விளையாடுவார்கள். உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தான் இந்தியாவை வென்றதே இல்லை. ஆனால் ஆண்டவன் விரும்பினால் அது விரைவில் நடக்கும் என்றார்.

இந்தியா

இந்தியா

உலகக் கோப்பை வரலாற்றில் இதுவரை இந்தியா பாகிஸ்தானை எதிர்த்து 5 போட்டிகளில் விளையாடி அத்தனை போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. தற்போதைய உலகக் கோப்பைக்கான இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையேயான போட்டிக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, February 4, 2015, 9:20 [IST]
Other articles published on Feb 4, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+