Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலக கோப்பை அரையிறுதி.. ஆஸி.யை வறுத்து வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் மீம்ஸ்களை பாருங்க!

சிட்னி: இந்தியா- ஆஸ்திரேலியா இடையேயான உலக கோப்பை அரையிறுதி போட்டி மார்ச் 26ம்தேதி, வியாழக்கிழமை சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் மேக்ஸ்வெல், இந்திய அணி பற்றி ஏளனம் செய்திருந்தார். ஆஸ்திரேலியாவில் ஒரு வெற்றி கூட பெறாமல் திரிந்த அணிதானே என்று இந்தியா பற்றி அவர் கூறியிருந்தார்.

இதையெல்லாம், மனதில் வைத்து இந்திய அணி வீரர்கள் கோபமடைந்தார்களோ இல்லையோ, நமது ரசிக கண்மணிகள் பொங்கிவருகின்றனர். ஆஸ்திரேலியாவை வெளுத்துக் கட்டியும், இந்தியாவை தூக்கிப் பிடித்தும், சமூக வலைத்தளங்கள் வழியாக, நம்மவர்கள் மீம்ஸ் உருவாக்கி உலவ விட்டுள்ளனர்.

வயிறு குலுங்க சிரிக்க வைக்கும், மீம்ஸ் சிலவற்றை இப்போது பார்க்கலாமா..

பச்சன்னா அடிதான்

பச்சன்னா அடிதான்

லீக் ஆட்டத்தில் ஜிம்பாப்வேயை உதைத்த இந்திய அணியிடம், அந்த அணி வீரர் கேட்கிறார். "நாங்க பச்ச சட்டை (பாகிஸ்தான் யூனிபார்ம் கலர்) போடவேயில்லையே. ஏன் இப்படி அடித்தீர்கள்" என்று.. அதற்கு நம்மவர் சொல்கிறார், கிரவுண்ட் பச்சையாகத்தானே இருந்தது என்று.

பயமா, எனக்கா..

பயமா, எனக்கா..

போக்கிரி படத்தில் அசால்டாக எதிரிகளை பந்தாடும் விஜயை போன்று, இந்தியாவும் அசத்தும் என்கிறது இந்த மீம்ஸ்.

ஆடுகளம்

ஆடுகளம்

ஆடுகளத்தில் தனுஷ் சேவல் சண்டை போட்டு ஜெயிப்பதை மீம்ஸ் செய்து 'ஒன்இந்தியா தமிழ்' இணையதளம் உருவாக்கிய இந்த மீம்ஸ், இந்த இணையதள பேஸ்புக் பக்கத்தில், பல்லாயிரக் கணக்காக பகிரப்பட்டு புது சாதனை படைத்துள்ளது.

ஐயம் வெய்ட்டிங்

ஐயம் வெய்ட்டிங்

கத்தி படத்து வில்லன் கதாப்பாத்திரத்துடன், இளைய தளபதி விஜய் இடைவேளை காட்சியில் பேசும் 'ஐ யம் வெய்ட்டிங்' என்ற மாஸ் சீனை, உருவி, மசாலா தடவியுள்ளனர் ரசிகர்கள்.

யார் மேலடா கைவச்ச..

யார் மேலடா கைவச்ச..

எவர்கிரீன் மாஸ் திரைப்படமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் பாட்ஷாவின் மிக முக்கியமான ஒரு சீனை உருவி ஆஸ்திரேலியாவுக்கு ஆப்பு தயார் செய்துள்ளனர். ரஜினிகாந்த் தங்கை யுவராணி கதாப்பாத்திரத்திற்கு, பாகிஸ்தானை ஒப்பிட்டுள்ளது, டைமிங் நச்.

வெள்ளையா இருக்காரே..

வெள்ளையா இருக்காரே..

இந்தியாதான் உலக கோப்பையை ஜெயிக்கும் என்று, ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங், கூறியிருந்தார். எனவே, வெள்ளையா இருக்குறவன் பொய் சொல்ல மாட்டான் என்ற டயலாக்கை உருவி முலாம் பூசிவிட்டனர் ரசிகர்கள்

அடிவாங்க தயாரா

அடிவாங்க தயாரா

அலர்ட் ஆறுமுகம், ஆஸ்திரேலியா, இந்தியாவிடம் உதை வாங்க ரெடியாவதாக சித்தரிக்கிறது இந்த மீம்ஸ்

புள்ளி இருந்தாலே கோலம் போடுராங்க

புள்ளி இருந்தாலே கோலம் போடுராங்க

பச்சை சட்டை போட்டால் மட்டுமல்ல, சட்டையில் கொஞ்சூண்டு பச்சை புள்ளி இருந்தாலும் அடித்துவிடுவார்கள் என்று ஆஸ்திரேலிய வீரரை, வெஸ்ட் இண்டீஸ் வீரர் எச்சரிப்பது போல உள்ளது இந்த கலக்கல் மீம்ஸ்

சூது கவ்வாது..

சூது கவ்வாது..

சூதுகவ்வும் படத்தில் வரும் கடத்தலுக்கான கண்டிஷன்கள் போல கஷ்டமான கண்டிஷன்களை பின்பற்றினால்தான் இந்தியாவை ஜெயிக்க முடியும் என்று நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்காவுக்கு பாடம் எடுக்கிறது இந்த மீம்ஸ்.

யாருக்கும் அஞ்சாத நாடு

யாருக்கும் அஞ்சாத நாடு

தல அஜித் நடித்த வீரம் படத்தில் இடம்பெற்ற மாஸ் காட்சியை இந்திய அணிக்கு ஒப்பிட்டு கிரியேட்டிவ் காட்டியுள்ளனர் ரசிகர்கள். "நாங்க நாலு பேரு இல்லடா.. ஐந்தாவதா ஒருத்தர் இருக்காரு, யாருக்கும் அஞ்சாதவரு" என்ற பஞ்ச் வசனத்தின்போது அஜித் ஊஞ்சலில் ஆடியபடியே வெளிப்படும் காட்சியை, 4 ஆசிய அணிகளுக்கும், இந்தியாவுக்கும் ஒப்பிட்டுள்ளனர்.

குனிய வைத்து கும்மல்

குனிய வைத்து கும்மல்

இந்தியா பற்றி மேக்ஸ்வெல் செய்த விமர்சனத்தால் கொதித்தெழுந்த ரசிகர்கள், இப்படி குனிய வைத்து கும்மியுள்ளனர்.

Story first published: Monday, March 23, 2015, 15:33 [IST]
Other articles published on Mar 23, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+