Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆஸியை அதன் சொந்த மண்ணில் டோணி பாய்ஸ் ஏன் கிழி, கிழின்னு கிழிக்கப் போறாங்க தெரியுமா?

சிட்னி: உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை அதன் சொந்த மண்ணில் இந்தியா வீழ்த்தும் என்று நம்ப காரணங்கள் உள்ளது.

உலகக் கோப்பை தொடரில் டோணி தலைமையிலான இந்திய அணி தான் விளையாடிய 7 போட்டிகளிலும் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. வரும் வியாழக்கிழமை சிட்னியில் நடக்கும் அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்கிறது.

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியை இந்திய அணி அதன் சொந்த மண்ணில் வீழ்த்தும் என்று நம்பப்படுகிறது. அதற்கு காரணமும் உள்ளது.

டோணி

டோணி

டோணி கேப்டனாக இருப்பது அணிக்கு மிகப்பெரிய பலம் ஆகும். அவர் எப்பொழுதுமே ஒரே போன்று திட்டமிட மாட்டார். அதனால் அவரின் செயல்களை எதிரணியால் கணிக்க முடியாது.

அஸ்வின்

அஸ்வின்

சிட்னி பிட்ச்சில் அஸ்வின் அதிசயம் நிகழ்த்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலிய அணி ஏற்கனவே அஸ்வினை நினைத்து சற்று பயத்தில் உள்ளது. சிட்னி பிட்ச் ஸ்பின்னர்களுக்கு ஏற்றது என்பது கூடுதல் பலம்.

பேட்டிங்

பேட்டிங்

இந்திய அணியில் துவக்க ஆட்டக்காரர்களின் விக்கெட்டுகளை எடுத்துவிட்டால் வென்றுவிடலாம் என்று ஆஸ்திரேலியா நினைக்க முடியாது. காரணம் இந்திய அணி வீரர்கள் அனைவரும் சாதனை படைக்கத் துடிப்பதால் ரன் குவிப்பிலும் போட்டி போடுகிறார்கள்.

இந்திய ரசிகர்கள்

இந்திய ரசிகர்கள்

சிட்னி ஆஸ்திரேலிய அணியின் சொந்த மண் ஆகும். ஆனால் சிட்னி அரங்கில் அந்நாட்டு ரசிகர்களைவிட இந்திய ரசிகர்கள் அதிக அளவில் இருந்தால் அது வியப்பான விஷயம் கிடையாது. ஏனென்றால் ஆஸ்திரேலியா என்றாலே இந்திய அணியை ஊக்குவிக்க நம் ரசிகர்கள் குவிந்துவிடுவது வழக்கம்.

உமேஷ்

உமேஷ்

உமேஷ் யாதவ், முகமது ஷமி, மோஹித் சர்மா ஆகிய பந்துவீச்சாளர்கள் கொடூரமான ஃபார்மில் உள்ளனர். அவர்களின் ஃபார்ம் எதிரணியினரை இதுவரை அலற வைத்துள்ளது. ஆஸ்திரேலியாவையும் அலற வைக்கும் என்று நம்பப்படுகிறது.

Story first published: Tuesday, March 24, 2015, 15:40 [IST]
Other articles published on Mar 24, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+