என்னையும் அனுஷ்காவையும் பற்றி எப்படி எழுதலாம்..? நிருபரை திட்டிய கோஹ்லியால் சர்ச்சை!
பெர்த்: எப்படி என்னைப் பற்றி அப்படி எழுதலாம் என்று, இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் விராட் கோஹ்லி, இந்திய பத்திரிகையாளர் ஒருவரிடம் சண்டை போட்டு கலாட்டா செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி வரும் 6ம்தேதி வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் மோத உள்ளது. இதற்காக பெர்த் நகரில் வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. வலைப் பயிற்சியை முடித்துவிட்டு தனது அறைக்கு கோஹ்லி திரும்பிக் கொண்டிருந்தபோது நடந்த ஒரு சம்பவம்தான் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

சகட்டு மேனிக்கு திட்டு
கோஹ்லி நடந்து சென்றபோது, இந்தியாவை சேர்ந்த ஆங்கில பத்திரிகையின் நிருபர் ஒருவர் அந்த வழியில் நின்றுள்ளார். அவரை பார்த்ததும், வாய்க்கு வந்தபடி திட்ட ஆரம்பித்தாராம், கோஹ்லி. இதனால் அந்த பத்திரிகையாளர் மட்டுமின்றி, சக வீரர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பத்திரிகையாளர் ஷாக்
திடீரென தன்னை மோசமாக திட்டியதற்கான காரணம் தெரியாமல் ஷாக்கில் நின்றுள்ளார் அந்த பத்திரிகையாளர். இதன்பிறகு சக வீரர்கள் சிலர், கோஹ்லியிடம் நைசாக பேச்சுக் கொடுத்து, அந்த பத்திரிகையாளரை ஏன் திட்டினீர்கள் என்று கேட்டுள்ளனர்.

அனுஷ்கா பாவம்..
தன்னையும், காதலி அனுஷ்கா ஷர்மாவையும் பற்றி சர்ச்சைக்குறிய ஒரு கட்டுரை அந்த பத்திரிகையில் வந்திருந்தது. எனவேதான் திட்டினேன் என்று கூறியுள்ளார் கோஹ்லி. ஆனால் அதன்பிறகுதான் தெரிந்துள்ளது, அந்த பத்திரிகையில் வந்த கட்டுரையை எழுதியது வேறு ஒரு நிருபர் என்பது. தனது தவறை உணர்ந்த கோஹ்லி, பத்திரிகையாளரை சந்திக்க தயங்கிக் கொண்டு, வேறு பத்திரிகையாளர்கள் சிலர் மூலமாக, திட்டலுக்கு உள்ளான பத்திரிகையாளரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டுள்ளாராம்.

ரவி சாஸ்திரி அட்வைஸ்
இதனிடையே சம்பவம் குறித்து அறிந்த அணி மேலாளர் ரவி சாஸ்திரி, கோஹ்லியை சந்தித்து, அவரது கோபத்தை குறைத்துக் கொள்ளுமாறு அறிவுரை கூறியுள்ளார். அடுத்த கேப்டனாக உருமாற வேண்டிய நேரத்தில், இப்படி கோபப்பட்டு காரியத்தை கெடுக்க வேண்டாம் என்று ரவி சாஸ்திரி, கோஹ்லியின் காதை கடித்துள்ளாராம்.


Click it and Unblock the Notifications