Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தென் ஆப்பிரிக்க அணியிடம் கோஹ்லி வைத்துள்ள பாக்கி.. 22ம் தேதி கணக்கு முடிப்பாரா?

மெல்போர்ன்: இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோஹ்லி கடந்த உலக கோப்பையின் முதல் போட்டியில் செஞ்சுரி அடித்த நேரம், திரும்பிப் பார்க்காமல் இந்திய அணி கோப்பையை கைப்பற்றி அசத்தியது. இம்முறையும் முதல் போட்டியிலேயே பாகிஸ்தானுக்கு எதிராக அவர் அடித்துள்ள செஞ்சுரி இந்திய ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளது. மேலும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இதுவரை சதம் அடிக்காத குறையை 22ம்தேதி போட்டியில் கோஹ்லி தீர்ப்பார் என்றும் எதிர்பார்க்கின்றனர் ரசிகர்கள்.

முதல் போட்டியிலேயே சதம்

முதல் போட்டியிலேயே சதம்

கடந்த 2011 உலக கோப்பையில் இந்தியா வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது. அப்போது இந்தியா தனது முதல் ஆட்டத்தில் வங்கதேசத்தை எதிர்கொண்டது. அந்த போட்டியில் கோஹ்லி 100 ரன்கள் எடுத்து நாட்-அவுட்டாக களத்தில் நின்றார்.

இந்தியா சாம்பியன்

இந்தியா சாம்பியன்

இதன்பிறகு இந்தியா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி இறுதி போட்டியில் இலங்கையையும் வீழ்த்தி வெற்றிவாகை சூடி சாம்பியன் ஆனது. எனவே கைராசிக்காரர் என்று புகழப்பட்டார் கோஹ்லி.

இப்போதும் முதல் போட்டியில் சதம்

இப்போதும் முதல் போட்டியில் சதம்

நடப்பு உலக கோப்பை தொடரின் முதல் போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை அடிலெய்டில் நடந்தது. அந்த போட்டியில் 107 ரன்களை விளாசினார் கோஹ்லி. இப்போட்டியில் இந்தியா 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இம்முறையும் சாம்பியன் நாம்தானா?

இம்முறையும் சாம்பியன் நாம்தானா?

கோஹ்லியின் கைராசி இம்முறையும் இந்தியாவுக்கு பலனளித்தால், கோப்பையை தூக்குவது உறுதி என்று நினைக்கின்றனர் இந்திய அணி வீரர்கள்.

22 சதங்கள் அடித்த கோஹ்லி

22 சதங்கள் அடித்த கோஹ்லி

கோஹ்லி குறுகியகாலத்திலேயே ஒருநாள் போட்டிகளில் மொத்தம் 22 சதங்கள் விளாசியுள்ளார். இதன் மூலம் அதிக சதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் கங்குலியுடன் 4வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.

ஜாம்பவான்கள் வரிசை

ஜாம்பவான்கள் வரிசை

சச்சின் 49 சதங்களுடன் முதல் இடத்திலும், ரிக்கி பாண்டிங் 30 சதங்களுடன் 2வது இடத்திலும், சனத் ஜெயசூர்யா 28 சதங்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

எந்தெந்த நாடுகளுடன் எத்தனை முறை?

எந்தெந்த நாடுகளுடன் எத்தனை முறை?

கோஹ்லி இலங்கைக்கு எதிராக 6 சதங்களும், மேற்கிந்திய தீவுகள், ஆஸ்திரேலியா, வங்கதேச அணிகளுக்கு எதிராக தலா 3 சதங்களும், பாகிஸ்தான், இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக தலா 2 சதங்களும் விளாசியுள்ளார். ஜிம்பாப்வேக்கு எதிராக 1 சதம் அடித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்காவிடம் பாக்கி இருக்கு

தென் ஆப்பிரிக்காவிடம் பாக்கி இருக்கு

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 13 போட்டிகளில் 11 பந்தையங்களில் களமிறங்க வாய்ப்பு கிடைக்கப்பெற்ற கோஹ்லி, சதம் அடித்தது கிடையாது. அவரது அதிகபட்ச ரன் 87 ஆகும். 11 இன்னிங்சுகளிலும் சேர்த்து மொத்தம் 344 ரன்கள் எடுத்துள்ள கோஹ்லியின் பேட்டிங் சராசரி 34.40 ஆகும். அதில் 3 அரை சதங்களும் அடங்கும்.

தாகம் தீருமா..

தாகம் தீருமா..

எனவே வரும் ஞாயிற்றுக்கிழமை போட்டியில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சதம் அடித்து தனது செஞ்சுரி தாகத்தை தீர்த்துக்கொள்வார் கோஹ்லி என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Story first published: Thursday, February 19, 2015, 14:42 [IST]
Other articles published on Feb 19, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+