டிசைன் அப்படி.. நாக்-அவுட் சுற்றுகளில் ஆட்டம் 'டை'யானாலும், கைவிடப்பட்டாலும், இந்தியாவுக்கே லாபம்!
மெல்போர்ன்: காலிறுதி, அரையிறுதியில் போட்டி டை ஆனால், மழையால் ரத்து செய்யப்பட்டால் அடுத்த சுற்றுக்கு செல்லும் அணி எப்படி தேர்வு செய்யப்படும் என்பதை ஐசிசி மீண்டும் ஒருமுறை விளக்கியுள்ளது.
உலக கோப்பை காலிறுதி போட்டி மற்றும் அரையிறுதி போட்டிகளுக்கு, ரிசர்வ்டே என்ற நடைமுறையை ஐசிசி கொண்டு வந்துள்ளது. மழையால் ஆட்டம் பாதித்தாலும், மறுநாளும், ஆட்டத்தை தொடர முடியும். ஒருவேளை அன்றும் மழை பெய்தால், ஆட்டம் கைவிடப்படும்.

ஐசிசி விதிமுறை
அதுபோன்ற ஆட்டம் கைவிடும் சூழல் ஏற்பட்டாலோ அல்லது போட்டியே டையில் முடிந்தாலோ, அடுத்த சுற்றுக்கு அணிகள் எப்படி தேர்ந்தெடுக்கப்படும் என்பதற்கான ஐசிசி விதிமுறை இதுதான்:

லீக் ஆட்டம் கணக்கெடுப்பு
காலிறுதியில், ஆட்டம் கைவிடப்படும் நிலை ஏற்பட்டாலோ அல்லது, போட்டி டை ஆனாலோ, லீக் சுற்றில், அவ்விரு அணிகளில், எந்த அணி அதிக புள்ளிகள் பெற்றதோ, அந்த அணிதான் அடுத்த சுற்றுக்கு போகும்.

இந்தியாவுக்கு சாதகம்
ஏ பிரிவில் நியூசிலாந்தும், பி பிரிவில் இந்தியாவும், லீக் சுற்றுகளில் முதல் இடங்களை பிடித்துள்ளதால், இவ்விரு அணிகளுக்கும் இந்த விதி சாதகமாகும்.

ஆஸி., தென் ஆப்பிரிக்கா
அதேபோல, ஏ பிரிவில் 2ம் இடம் பிடித்துள்ள ஆஸ்திரேலியாவுக்கும், பி பிரிவில் 2ம் இடம் பிடித்துள்ள தென் ஆப்பிரிக்காவுக்கும் கூட இந்த விதி அனுகூலமேயாகும்.

சூப்பர் ஓவர்
ஆனால், இறுதி போட்டியின்போது, ஆட்டம் டை ஆனால், சூப்பர் ஓவர் மூலம் வெற்றியாளர் தேர்ந்தெடுக்கப்படுவர். காலிறுதி, அரையிறுதிக்கு இந்த சூப்பர் ஓவர் நடைமுறை கிடையாது.


Click it and Unblock the Notifications