Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆஷஸ் முதல் டெஸ்ட்.. உலகின் முதல் நிலை பேட்ஸ்மேன் கோல்டன் டக்.. இங்கிலாந்து வீரர் பிராட் அபார பவுலிங்

பர்மிங்காம் : ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் உலகின் முதல் நிலை வீரரான ஆஸ்திரேலியாவின் மார்னஸ் லாபஸ்சேன் கோல்டன் டக் ஆகி வெளியேறியது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 393 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து டிக்ளேர் செய்தது. இதனையடுத்து முதல் இன்னிங்சில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி விக்கெட் இழப்பின்றி 14 ரன்களுடன் 2வது நாள் ஆட்டத்தை தொடர்ந்தது.

world no 1 test batsman Marnus Labuschagne dismissed for golden duckout

இந்திய பவுலர்கள் போல் ரன்களை வாரி கொடுக்காமல், இங்கிலாந்து அணி வீரர்கள் கட்டுக்கோப்பாக பந்துவீசினர். ஒருபுறம் ஆண்டர்சன், மறுபுறும் பிராடு என்று கூட்டணி அமைத்து, இங்கிலாந்து வீரர்கள், ஆஸ்திரேலியாவுக்கு நெருக்கடி அளித்தனர்.

இதற்கு கை மேல் பலனாக, ஸ்டுவர்ட் பிராட் பந்துவீச்சில், ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் 9 ரன்களில் கிளின் போல்ட் ஆனார். இதனையடுத்து, உலகின் முதல் நிலை வீரரான மார்னஸ் லாபஸ்சேன் களத்திற்கு வந்து பிராட் பந்தை சந்தித்தார்.

ஆப் சைடில் வீசிய பந்தை லாபஸ்சேன் தேவையில்லாமல் தொட, அது பாரிஸ்டோவிடம் சிக்கியது. இதனையடுத்து, 2 பந்தில் 2 விக்கெட்டுகளை எடுத்து இங்கிலாந்து அணி தக்க பதிலடி கொடுத்தது. எனினும் ஹாட்ரிக் விக்கெட்டை வீழ்த்தும் வாய்ப்பை பிராட் தவறவிட்டார்.

இதனையடுத்து, ஸ்மித்தும், உஸ்மான் கவாஜாவும் இணைந்து ஆஸ்திரேலிய அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் ஈடுபட்டனர். நிதானமாக விளையாடி வந்த ஸ்மித் 59 பந்துகளை எதிர்கொண்டு 16 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்டோக்ஸ் எல்பிடபிள்யூ ஆனார். இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 74 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

Story first published: Saturday, June 17, 2023, 17:50 [IST]
Other articles published on Jun 17, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+