Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கவாஸ்கர், ஸ்ரீகாந்த் முன் ஆடையின்றி நின்ற பெண்! இந்திய வீரர்கள் செய்தது என்ன தெரியுமா? நடந்தது என்ன?

லண்டன் : 1986 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய வீரர்கள் விளையாடிய போது 22 வயது பெண் ஒருவர் நிர்வாணமாக மைதானத்திற்குள் ஓடி வந்த சம்பவம் குறித்து தான் தற்போது நாம் பார்க்க இருக்கின்றோம்.

கிரிக்கெட் போட்டி நடைபெறும் போது பல வீரர்கள் மீது உள்ள அன்பின் காரணமாக ரசிகர்கள் மைதானத்திற்குள் ஓடிவரும் சம்பவம் அவ்வப்போது நடைபெறும். வீரர்களை எப்படியாவது தொட்டுப் பார்த்து விட வேண்டும் என்றும் சிலர் வீரர்களின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்க வேண்டும் என்றும் மைதானத்திற்குள் நுழைந்து ரகளையில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.

cricket sunil gavaskar

அதே போன்று சிலர் ஏதேனும் ஒரு விவகாரத்திற்கு குரல் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்திலும் தங்கள் கோரிக்கை மீது கவனம் பெற வேண்டும் என்பதற்காக இதுபோன்ற விளையாட்டுப் போட்டிகளில் உள்ளே நுழைந்து போராட்டத்தில் ஈடுபடுவார்கள். இப்படி பல சம்பவங்களை நாம் பார்த்திருக்கிறோம்.

ஆனால் 1986 ஆம் ஆண்டு ஒரு வித்தியாசமான நிகழ்வு நடந்தது. இந்தியா, இங்கிலாந்து அணிகள் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடியது. அப்போது இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸ் 294 ரன்கள் எடுத்தது. அப்போது இந்தியா மீண்டும் விளையாடிய போது களத்தில் கவாஸ்கர் மற்றும் ஸ்ரீகாந்த் ஆகியோர் நின்று கொண்டிருந்தனர்.

அப்போது யாரும் எதிர்பாராத விதமாக 22 வயதான ஆஸ்லி சோமஸ் என்ற பெண் நிர்வாணமாக மைதானத்திற்குள் நுழைந்து கலாட்டாவில் ஈடுபட்டார். கையில் அவர் இயன் போத்தம் என்ற ஒரு பதாகையுடன் நின்றிருந்தார். அப்போது இங்கிலாந்து அணியில் மிகப்பெரிய ஆல் ரவுண்டரான இயன் போத்தம் விளங்கினார்.

இந்த தொடருக்கு முன்பு இயன் போத்தம் கஞ்சா அடித்து சிக்கிக்கொண்டார். இதனால் அவருக்கு கிரிக்கெட் போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த தடையை எதிர்த்து இங்கிலாந்து ரசிகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது இயன் போத்தமின் ரசிகையான ஆஸ்லி சோமர்ஸ் உடலில் துணி இல்லாமல் நிர்வாணமாக மைதானத்திற்குள் நுழைந்தார்.இதனால் ஆட்டம் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.

அந்தப் பெண் நிர்வாணமாக நின்ற போது இந்திய அணி வீரர்களான கவாஸ்கர் மற்றும் ஸ்ரீகாந்த் அந்தப் பெண்ணை கொஞ்சம் கூட கண்டுகொள்ளாமல் மைதானத்தை சோதித்துப் பார்ப்பதும் தங்களது போட்டியில் கவனம் செலுத்துவதும் என்ற நோக்கத்தில் இருந்தார்கள். தவிர அந்த பெண்ணை தலை நிமிர்ந்து கூட பார்க்கவில்லை. இதனால் இந்திய வீரர்கள் ஜெண்டல் மேனாக நடந்து கொண்டார்கள். நிர்வாணமாக பெண் வந்து நின்றும் கூட கிரிக்கெட் போட்டியில் தான் இருவரின் கவனமும் இருந்தது என்றும் இங்கிலாந்து ஊடகங்கள் அவர்களை பாராட்டியது. இதனை அடுத்து, அந்தப் பெண் கைது செய்யப்பட்டார்.

Story first published: Monday, August 19, 2024, 15:50 [IST]
Other articles published on Aug 19, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+