பாட்டியுடன் ரகசிய உறவு.. ஷேன் வார்னே குறித்து வெளியான பகீர் தகவல்.. எப்படி இருந்திருக்கார் பாருங்க!
ஆஸ்திரேலியா: மறைந்த கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்னே, 51வயது பெண்ணுடன் தொடர்பில் இருந்ததாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
Recommended Video
உலகின் தலைசிறந்த சுழற்பந்துவீச்சாளராக பெருமை பெற்றவர் ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் ஷேன் வார்னே.
இந்தாண்டு தொடக்கத்தில் மர்மமான முறையில் அவர் உயிரிழந்தது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

வார்னேவின் மரணம்
தாய்லாந்து நாட்டிற்கு சுற்றுலா சென்றிருந்த ஷேன் வார்னே, ஹோட்டல் அறையில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். போலீஸ் விசாரணையில் அவர் மாரடைப்பு காரணமாக தான் உயிரிழந்தார் என அறிவிக்கப்பட்ட போதும், அவரின் மரணத்தில் இன்னும் மர்மங்கள் தொடர்ந்து கொண்டே தான் வருகிறது.

சர்ச்சை தகவல்
இந்நிலையில் வார்னே குறித்து பரபரப்பு தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. ஆஸ்திரேலியாவில் 'உலகின் ஹாட்டஸ்ட் பாட்டி' என்று சமூக வலைதளங்களில் பிரபலமாக இருந்து வருபவர் 51 வயதான ஜினா ஸ்டீவர்ட். இவர் தற்போது, ஷேன் வார்னே தன்னுடன் உறவில் இருந்து வந்ததாக பொதுவெளியில் அறிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

எப்படி அவரை தெரியும்
இதுகுறித்து பேசிய அவர், ஷேன் வார்னே கோல்ட் கோஸ்ட் பகுதிக்கு வந்திருந்த போது நாங்கள் சந்தித்துக் கொண்டோம். அதன்பின்னர் இரவு முழுவதும் நாங்கள் ஒன்றாக பேசி, ஒருவரை ஒருவர் புரிந்துக்கொண்டோம். தொடர்ந்து நாங்கள் இருவரும் மிகவும் நெருக்கமாகி உறவில் இருந்து வந்தோம். ஆனால் இந்த உறவு குறித்து வெளியில் யாரிடமும் கூற கூடாது என வார்னே கேட்டுக்கொண்டார். அதனை நான் ஏற்றுக்கொண்டேன்.

மாறுவேடங்கள்
நாங்கள் ஒன்றாக இருந்த சமயத்தில் பல்வேறு ஊடகங்களும் எங்களை புகைப்படம் எடுக்க முயன்றனர். ஆனால் நானும் அவரும், மாறுவேடத்தை போட்டுக்கொண்டு ஊர் முழுக்க சுற்றி வருவோம். தாய்லாந்துக்கு அவர் புறப்படுவதற்கு முன்பு அவருடன் நான் பேசினேன். என்னுடன் பேசினால் மிகவும் நிம்மதியாக இருப்பதாக வார்னே அடிக்கடி கூறுவார். ஆனால் தற்போது பாதியில் விட்டு சென்றுள்ளார் என கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications