Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலகின் பணக்கார கிரிக்கெட்டர்கள் பட்டியல்.. இவரா முதலிடம்??.. பெயரை கேட்டு ரசிகர்கள் ஆச்சரியம்!

மும்பை: உலகின் மிகவும் பணக்கார கிரிக்கெட் பிரபலங்கள் குறித்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளன. அதில் ஆடம் கில் கிறிஸ்டின் பெயர் முதலிடத்தை பிடித்திருப்பது தான் ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.

டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர், ஐபிஎல் 2023, டி20 உலகக்கோப்பை, ஆசிய கோப்பை, 50 ஓவர் உலகக்கோப்பை போன்ற பல்வேறு தொடர்களால் கிரிக்கெட் மீதான ரசிகர்களின் மோகம் ஆண்டிற்கு ஆண்டிற்கு அதிகரித்துக்கொண்டே தான் உள்ளது.

அதே போல கிரிக்கெட் வீரர்களின் சம்பளமும், அவர்களுக்கு குவியும் விளம்பர மதிப்புகளும் பல நூறு கோடிகளையும் தாண்டி சென்றுக்கொண்டிருக்கிறது. இப்படி இருக்கையில் தான் ஒவ்வொரு ஆண்டும் பணக்கார கிரிக்கெட் பிரபலங்கள் என்ற ஆய்வு நடத்தப்படுகிறது.

பணக்கார வாரியம்

பணக்கார வாரியம்

உலகிலேயே மிகவும் பணக்கார கிரிக்கெட் வாரியமாக பிசிசிஐ தான் பார்க்கப்படுகிறது. ஐபிஎல் தொடரில் கிடைக்கும் வருமானம் மூலம் மிகப்பெரிய கோட்டையை கட்டமைத்துக்கொண்டுள்ளது. இதனால் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு தான் இருப்பதிலேயே அதிக சம்பளங்களும் கொடுக்கப்படுகின்றன. எப்போதுமே விராட் கோலி, தோனி உள்ளிட்ட இந்திய நட்சத்திரங்கள் தான் இந்த பணக்கார கிரிக்கெட்டர்கள் பட்டியலில் டாப்பில் இருப்பார்கள்.

யாருக்கு முதலிடம்

யாருக்கு முதலிடம்

இந்நிலையில் இந்த முறை ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஆடம் கில் கிறிஸ்ட்-ன் பெயர் முதலிடத்தில் இருப்பது தான் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சி.இ.ஓ வேர்ல்ட் வெளியிட்டுள்ள இந்த ஆய்வு முடிவில் கில் கிறிஸ்ட் சுமார் 3120 கோடி சொத்துமதிப்புடன் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இதில் தான் சிறிய தவறு நடந்துள்ளது. ஆடம் கில் கிறிஸ்ட் என்ற பெயரிலேயே மற்றொரு தொழிலதிபர் ஒருவர் எஃப் 45 என்ற ஜிம்மை நடத்தி வருகிறார். அவரின் சொத்து மதிப்பும் இதில் இணைக்கப்பட்டதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. மற்றபடி இந்திய வீரர்கள் தான் வழக்கம் போல ஆதிக்கம் செலுத்துகின்றனர்.

சாதித்த ஜாம்பவான்

சாதித்த ஜாம்பவான்

இப்பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் சச்சின் டெண்டுல்கர். இந்திய மதிப்பில் சுமார் ரூ.1400 கோடி சொத்துக்கள் அவரிடம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட்டில் இருந்து விலகிய போதும், இன்னும் சச்சினுக்கு நிறைய விளம்பரங்கள் குவிந்துக்கொண்டே தான் உள்ளன. இதுமட்டுமல்லாமல் சச்சின் தனிப்பட்ட முறையில் நிறைய நிறுவனங்களை நடத்தி வருகிறார்.

2வது இடம் யாருக்கு

2வது இடம் யாருக்கு

2வது இடத்தில் இருப்பது முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி தான். தோனி காட்டில் மழை என்பதை போல அனைத்து தொலைக்காட்சிகளிலும் தோனியின் விளம்பரம் ஆக்கிரமித்துள்ளது. இதுமட்டுமல்லாமல் ஆடை துறை, பீர் நிறுவனம், ட்ரோன்கள், சினிமா தயாரிப்பு, விவசாயம் என ஏகபோகத்திற்கு முதலீடுகளை அள்ளி வீசியுள்ளார். இதனால் 2023ம் ஆண்டில் அவரின் சொத்து மதிப்பு ரூ.1000 கோடி வரை இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.

கோலியின் நிலைமை

கோலியின் நிலைமை

இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தான் இதிலும் தோனிக்கு அடுத்தபடியாக உள்ளார். கடந்தாண்டு ஆசிய கோப்பை முதல் அட்டகாசமான கம்பேக் கொடுத்துள்ள கோலிக்கு மீண்டும் விளம்பர மதிப்புகள் கூடியுள்ளது. அவரின் தற்போதைய சொத்து மதிப்பு ரூ.920 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது.இப்பட்டியலில் ரூ.300 கோடியுடன் விரேந்தர் சேவாக் 8வது இடத்தில் இருக்கிறார்.

Story first published: Wednesday, March 15, 2023, 10:03 [IST]
Other articles published on Mar 15, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+