Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியாவில் உருவாகிறது உலகின் 3வது பெரிய ஸ்டேடியம்.. பிசிசிஐ ரூ.100கோடி நிதியுதவி.. எங்கு தெரியுமா?

மும்பை: உலகின் 3வது பெரிய கிரிக்கெட் மைதானம் இந்தியாவில் அமைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இதற்காக பிசிசிஐ, ரூ.100 கோடி வழங்கி உதவி செய்துள்ளது.

சர்வதேச அளவில் அதிகம் செல்வாக்கு வாய்ந்த கிரிக்கெட் வாரியங்களில் பிசிசிஐ-ம் ஒன்றாக உள்ளது.

இந்தியாவில் கிரிக்கெட் போட்டிகளுக்கான ரசிகர்களும் அதிகளவில் இருப்பதால், அதனை மேம்படுத்தும் நோக்கி பல்வேறு நடவடிக்கைகளை பிசிசிஐ மேற்கொண்டு வருகிறது.

புதிய கிரிக்கெட் மைதானம்

புதிய கிரிக்கெட் மைதானம்

அந்தவகையில் இந்தியாவில் புதிய கிரிக்கெட் மைதானம் ஒன்று ராஜஸ்தான் மாநிலத்தில் கட்டுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இது உலகிலேயே 3வது மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக உருவாகவுள்ளது. முதலிடத்தில் இந்தியாவில் சமீபத்தில் திறக்கப்பட்ட நரேந்திர மோடி மைதானம் மற்றும் ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ன் மைதானமும் உள்ளது.

நிதிச்சிக்கல்

நிதிச்சிக்கல்

ஜெய்ப்பூர் நகரத்தில் உள்ள சாம்ப் என்ற கிராமத்தில் இந்த மைதானத்திற்காக 100 ஏக்கர் நிலத்தை ராஜஸ்தான் கிரிக்கெட் வாரியம் குத்தகைக்கு எடுத்துள்ளது. ரூ.350 கோடி செலவில் கட்டப்படும் இந்த மைதானத்தில் 75,000 பார்வையாளர்கள் வரை அமர்ந்து பார்க்கக்கூடிய அளவிற்கு திட்டம் போடப்பட்டுள்ளது. ஆனால் மைதானத்தை கட்டுவதற்கு போதிய நிதி இல்லாத காரணத்தினால் ராஜஸ்தான் கிரிக்கெட் வாரியம் வங்கிகளிடம் ரூ.100 கோடி கடனுதவி கேட்டு வருகிறது.

பிசிசிஐ நிதியுதவி

பிசிசிஐ நிதியுதவி

இந்நிலையில் மைதானத்தின் கட்டுமானப்பணிகளுக்காக பிசிசிஐ ரூ.100 கோடியை நிதியுதவி அளித்துள்ளது. இதுகுறித்து நடத்தப்பட்ட ஆலோசனையில் பிசிசிஐ தலைவர் கங்குலி இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் இன்னும் சில நாட்களில் மைதானத்தின் கட்டுமான பணிகள் தொடங்கப்படவுள்ளன.

ஜெய்ப்பூர் மைதானம்

ஜெய்ப்பூர் மைதானம்

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ஏற்கனவே சவாய் மான்சிங் கிரிக்கெட் மைதானம் உள்ளது. 30,000 பார்வையாளர்கள் அமர்ந்து பார்க்கக்கூடிய இந்த மைதானம், ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணியின் ஹோம் மைதானமாக இருந்து வருகிறது. ஆனால் சர்வதேச போட்டிகளை இங்கு நடத்துவதை பிசிசிஐ நிறுத்திவைத்துள்ளது. கடைசியாக கடந்த 2013ம் ஆண்டு இந்தியா - ஆஸ்திரேலியாவுக்கு இடையே ஒருநாள் போட்டி நடைபெற்றது. இதில் இந்திய அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, July 3, 2021, 22:08 [IST]
Other articles published on Jul 3, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+