Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆஸி.க்கு கிடுக்கிப்பிடி போட்ட வங்கதேசம்.. மேக்ஸ்வெல், வாட்சன் புண்ணியத்தால் தப்பியது

பெங்களூரு: வங்கதேசத்துடன் நடந்த உலகக் கோப்பை டி20 போட்டியில் ஆஸ்திரேலியா அணி ஜஸ்ட் மிஸ் ஆகி தப்பிப் பிழைத்தது. அதிரடியாக பந்து வீசிய வங்கதேச வீரர்கள், ஆஸ்திரேலியாவுக்கு சற்றே நடுக்கத்தைக் கொடுத்து விட்டனர்.

பெங்களூரு சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நடந்த போட்டியில் முதலில் பேட் செய்த வங்கதேச அணி 156 ரன்களைக் குவித்தது. சவாலான இந்த ஸ்கோரை சேஸ் செய்த ஆஸ்திரேலியா ஆரம்பத்தில் சிறப்பாகவே ஆடியது.

8வது ஓவர் வரை ஒரு விக்கெட்டை மட்டுமே அது இழந்திருந்தது. ஆனால் அதன் பிறகு விக்கெட்டுகள் சீட்டுக் கட்டு போல சரியத் தொடங்கின.

உஸ்மான் காஜா அபாரம்

உஸ்மான் காஜா அபாரம்

ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் காஜா சிறப்பாக ஆடினார். அவர் 45 பந்துகளில் 58 ரன்களைக் குவித்தார். இதில் ஒரு சிக்ஸரும், 7 பவுண்டரிகளும் அடக்கம்.

11வது ஓவரிலிருந்து சிக்கல்

11வது ஓவரிலிருந்து சிக்கல்

8 ஓவர்கள் வரை ஆஸ்திரேலியா ஒரு விக்கெட் மட்டுமே இழந்திருந்தது. இதனால் நல்ல நிலையில் இருந்தது. ஆனால் 11வது ஓவரிலிருந்து நிலைமை மாறியது. விக்கெட்கள் விழத் தொடங்கின.

கை கொடுத்த மேக்ஸ்வெல்

கை கொடுத்த மேக்ஸ்வெல்

இந்த நிலையில் கிளன் மேக்ஸ்வெல் அதிரடியாக ஆடி அணிக்குக் கை கொடுத்தார். அதிரடியாக ஆடிய அவர் 15 பந்துகளில் 26 ரன்களைக் குவித்து அணியின் நிலையை ஸ்திரப்படுத்தினார்.

ஷேன் வாட்சன்

ஷேன் வாட்சன்

மறுபக்கம் ஷேன் வாட்சன் நிலையாக ஆடி 21 ரன்களைச் சேர்த்தார். டேவிட் வார்னர் பங்கு 17 ஆகும். ஸ்டீவ் ஸ்மித் 14 ரன்கள் எடுத்தார்.

அசத்திய ஷாகிப் அல் ஹசன்

அசத்திய ஷாகிப் அல் ஹசன்

வங்கதேச பந்து வீச்சாளர்கள் மிரட்டி விட்டனர். குறிப்பாக ஷாகிப் அல் ஹசன் அசத்தினார். 27 ரன்கள் கொடுத்த அவர் 3 விக்கெட்களைச் சாய்த்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் 2 விக்கெட்கள் எடுத்தார்.

ஆஸி. பவுலிங் ஓட்டை

ஆஸி. பவுலிங் ஓட்டை

முன்னதாக டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தது. ஆனால் அந்த அணியின் பந்து வீச்சைக் கண்டு வங்கதேசம் கொஞ்சம் கூட அச்சப்படவில்லை.

மகமதுல்லா கலக்கல்

மகமதுல்லா கலக்கல்

மகமதுல்லா அசத்தலாக ஆடி 29 பந்துகளில் 49 ரன்களைக் குவித்தார். இதில் ஒரு சிக்ஸரும், 7 பவுண்டரிகளும் அடக்கம்.

ஆடம் ஜம்பாவுக்கு 3

ஆடம் ஜம்பாவுக்கு 3

ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்களில் புதுமுக வீரர் ஆடம் ஜம்பாவுக்கு 3 விக்கெட்கள் கிடைத்தன. இவர்தான் ஆட்ட நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

3வது இடத்தில் ஆஸி.. அடிமட்டத்தில் வங்கதேசம்

3வது இடத்தில் ஆஸி.. அடிமட்டத்தில் வங்கதேசம்

ஆஸ்திரேலியாவுக்கு இது முதல் வெற்றியாகும். அது தற்போது 2வது பிரிவில் 3வது இடத்தில் உள்ளது. வங்கதேசம் கடைசி இடத்தில் உள்ளது.

Story first published: Tuesday, March 22, 2016, 11:16 [IST]
Other articles published on Mar 22, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+