Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோஹ்லிக்கு ஷொட்டு வைத்த கையால், ரோகித், தவானுக்கு குட்டு வைத்த டோணி!

மொகாலி: கோஹ்லியை மட்டுமே நம்பிக்கொண்டிருப்பதை தவிர்த்து பிற பேட்ஸ்மேன்களும் ரன் அடிக்க வேண்டும் என்று இந்திய கேப்டன் டோணி கூறினார்.

உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியின் வாழ்வா-சாவா ஆட்டத்தில் இந்தியா-ஆஸ்திரேலியா நேற்று மொகாலியில் மோதின. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 160 ரன்களை குவித்தது.

2வது பேட் செய்த இந்திய அணி, 19.1 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது. துணை கேப்டன் கோஹ்லி அதிகபட்சமாக 51 பந்துகளில் 82 ரன்கள் குவித்து அவுட்-ஆகாமல் களத்தில் நின்று அணியின் வெற்றிக்கு உதவினார்.

பாராட்டு, கண்டிப்பு

பாராட்டு, கண்டிப்பு

போட்டி முடிந்த பிறகு பரிசளிப்பு நிகழ்ச்சியில் பேசிய டோணி, கோஹ்லியை பாராட்டியபோதிலும், சோபிக்காத பிற பேட்ஸ்மேன்களை கடிந்து கொண்டார்.

பங்களிப்பு எங்கே

பங்களிப்பு எங்கே

டோணி கூறியதாவது: கோஹ்லியை மட்டுமே நாம் எப்போதும் நம்பிக்கொண்டிருக்க கூடாது. பிற பேட்ஸ்மேன்களும், தங்களது பங்களிப்பை வழங்க வேண்டும். பிறர் ஓரளவுக்கு, பங்களிப்பை வழங்கினாலும்கூட, அவர்கள் ஆட்டத்தை இன்னும் மேம்படுத்த வேண்டும்.

100 சதம் இல்லையே

100 சதம் இல்லையே

விராட் கோஹ்லியை தவிர்த்து பார்த்தால், இந்திய அணி பேட்ஸ்மேன்கள் தங்களின் திறமையில் 60 அல்லது 65 சதவீதத்தை மட்டும்தான் வெளிப்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையை அவர்கள் மாற்றி 100 சதவீதம் திறமையோடு ஆட வேண்டும்.

தானே உட்கார்ந்த தானை தலைவன்

தானே உட்கார்ந்த தானை தலைவன்

கோஹ்லியின் ஆட்டத்தை எதிர்முனையில் நின்று நான், ரசிப்பது இது முதல் முறை கிடையாது. கடந்த சில வருடங்களாக கோஹ்லி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவர் தனது ஆட்டத்தை தானே மேம்படுத்தியுள்ளார்.

ருசித்து

ருசித்து

அணிக்காக ரன்களை திரட்ட வேண்டும் என்ற பசி, கோஹ்லியிடம் அதிகமாக உள்ளது. எனவேதான் ஒவ்வொரு போட்டியிலும், கோஹ்லி புதிய உச்சங்களை தொட்டு வருகிறார்.

ஓடு, ஓடு

ஓடு, ஓடு

ரன் ஓடுவது தற்போதைய கிரிக்கெட் உலகில் மிக முக்கியமான செயலாகும். ஒரு ரன் ஓட வேண்டிய நேரத்தில் இரண்டு ரன்களை ஓடுவது எதிரணியினருக்கு சோர்வை கொடுக்கும். நானும் விராட்டும், இதைத்தான் செய்தோம்.

கீப்பிங் செய்தப்பவே போட்ட ஸ்கெட்ச்

கீப்பிங் செய்தப்பவே போட்ட ஸ்கெட்ச்

161 ரன்களை விரட்ட வேண்டும் என்பது இந்த பிட்சில் கஷ்டமான காரியம்தான். நான் கீப்பிங் செய்தபோதே, விக்கெட்டின் தன்மையை கவனித்தேன். அதில் வேறுபாடு இருந்தது. எனவே நினைத்த வேகத்தில் பந்து பேட்ஸ்மேனை நோக்கி வராது என்பதை உணர்ந்திருந்தேன்.

ஓடினோம், ஓடினோம்

ஓடினோம், ஓடினோம்

பிட்சின் தன்மை இப்படி இருந்ததால், மிடில் ஓவர்களில் அதிகப்படியான ரன் ஓட வேண்டும் என்று முதலிலேயே தீர்மானித்திருந்தோம். அதன்படி கோஹ்லியும், நானும் அதிகப்படியாக ஓடி ரன்களை சேகரித்தோம். இவ்வாறு கோஹ்லி தெரிவித்தார்.

சொதப்பல் செம்மல்கள்

சொதப்பல் செம்மல்கள்

ரோகித் ஷர்மா, தவான், சுரேஷ் ரெய்னா ஆகிய முன்னணி பேட்ஸ்மேன்கள் இந்த உலக கோப்பை தொடரில் தொடர்ந்து சொதப்பலாக ஆடிவருகிறார்கள். கோஹ்லியை மட்டுமே நம்பி இந்திய பேட்டிங் பயணித்துக்கொண்டுள்ளது. இதைத்தான் டோணி குட்டியுள்ளார்.

Story first published: Monday, March 28, 2016, 11:55 [IST]
Other articles published on Mar 28, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+