உலக கோப்பை டி20: இலங்கையை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இங்கிலாந்து !
டெல்லி: உலககோப்பை டி20 கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டத்தில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.
உலக கோப்பை கிரிக்கெட், குரூப் 1 பிரிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. தான் மோதிய 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றது. இந்த பிரிவில் இருந்து அரை இறுதிக்கு நுழைய இங்கிலாந்து, இலங்கை, தென்ஆப்பிரிக்கா ஆகிய 3 அணிகள் இடையே போட்டி நிலவுகிறது.

இதில் ஒன்றுதான் அரையிறுதிக்குள் நுழைய முடியும் என்ற நிலையில், இங்கிலாந்து - இலங்கை அணிகள் சனிக்கிழமை இரவு டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. இதனையடுத்து களம் இறங்கிய இங்கிலாந்து அணி 4 ரன்களில் முதல் விக்கெட்டை பறிகொடுத்தது.
பின்னர் அந்த அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 42 பந்துகளில் 50 ரன்களையும், 15 ஓவர்களில் 100 ரன்களை எட்டியது. இருப்பினும் இறுதியில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் குவித்தது.
இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக பட்லர் 66, ராய் 42, ரூட் 25, மோர்கன் 22 ரன்கள் எடுத்தனர். இலங்கை தரப்பில் வாந்தெர்சே 2 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். இதனையடுத்து 172 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. ஆனால், அந்த அணி 15 ரன்களுக்குள் 4 விக்கெட்டுக்களை இழந்தது தடுமாறியது. இலங்கை பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
கடைசி ஓவரில் இலங்கை அணியின் வெற்றிக்கு 15 ரன்கள் தேவைப்பட்டன. ஆனால் கடைசி ஓவரை சிறப்பாக வீசிய இங்கிலாந்து வீரர் ஸ்டோக்ஸ் சிறப்பாக பந்து வீசி 4 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்தார், முடிவில் இலங்கை அணி 20 ஓவரின் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் மட்டும் எடுத்து 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இலங்கை அணியில் அதிகபட்சமாக, அந்த அணி கேப்டன் ஏஞ்சலா மேத்யூஸ் ஆட்டமிழக்காமல் 73 ரன்கள் குவித்தார். வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது


Click it and Unblock the Notifications