Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சுழற் பந்து வீச்சாளர் நோ-பால் போட்டதை ஏற்றுக்கொள்ள முடியாது.. அஸ்வினை சாடும் கவாஸ்கர்

மும்பை: ஸ்பின்னர்கள் நோ-பால் போடுவது என்பது எதிர்பார்க்காத ஒன்று. வேகப்பந்து வீச்சாளர்கள், யார்க்கரோ, பவுன்சரோ வீச முயலும்போது, கால் வெளியே சென்று நோ-பால் ஆகும் வாய்ப்பு ஏற்படும். ஸ்பின்னர்களுக்கு அப்படி எந்த நெருக்கடியும் கிடையாது.

கிரீசுக்குள் நின்று பந்துபோடுவதை நெட் பிராக்டீசின்போதே செய்து பார்த்திருக்க வேண்டும் என்று அஸ்வினை மறைமுகமாக சாடியுள்ளார், சுனில் கவாஸ்கர்.

டி20 உலக கோப்பை அரையிறுதியில் மேற்கு இந்திய தீவிடம் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியை தழுவியது. இதனால் பைனலுக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது.

சிம்மன்ஸ் அதிரடி

சிம்மன்ஸ் அதிரடி

192 ரன்களை குவித்தும் கூட இந்திய பவுலர்களால் அந்த ரன்னை பாதுகாத்துக்கொள்ள முடியவில்லை. மே.இ.தீவுகள் அணியின், லென்டில் சிம்மன்ஸ் அதிரடியாக 51 பந்துகளில் 82 ரன்களை குவித்தது இந்திய தோல்விக்கு முக்கிய காரணம்.

ஏற்க முடியாது

ஏற்க முடியாது

இதுகுறித்து சுனில் கவாஸ்கர் கூறியுள்ளதாவது: ஸ்பின்னர்கள் நோ-பால் போடுவது என்பது எதிர்பார்க்காத ஒன்று. வேகப்பந்து வீச்சாளர்கள், யார்க்கரோ, பவுன்சரோ வீச முயலும்போது, கால் வெளியே சென்று நோ-பால் ஆகும் வாய்ப்பு ஏற்படும். ஸ்பின்னர்களுக்கு அப்படி எந்த நெருக்கடியும் கிடையாது. கிரீசுக்குள் நின்று பந்துபோடுவதை நெட் பிராக்டீசின்போதே செய்து பார்த்திருக்க வேண்டும்.

ஒரு நபர் அணியல்ல

ஒரு நபர் அணியல்ல

மே.இ.தீவுகள் ஒரு வீரரை நம்பிய அணி கிடையாது. விராட் கோஹ்லியையும், கெயிலையும் ஒப்பிட்டு நாம் பேசி வந்தோம். அது ஒரு அளவுக்குள் இருந்தால்தான் நல்லது. மே.இ.தீவுகள் அணி, எப்படி ஒரு குழுவாக இணைந்து ஆட வேண்டும் என்பதை காட்டிவிட்டது.

ரன் அவுட் மிஸ்சிங்

ரன் அவுட் மிஸ்சிங்

மே.இ.தீவுகள் அணி கிடைத்த வாய்ப்பையெல்லாம் பயன்படுத்திக்கொண்டு சிறப்பாக செயல்பட்டது. விராட் கோஹ்லியை இருமுறை ரன் அவுட் செய்ய வாய்ப்பு கிடைத்தும் அதை அந்த அணி தவற விட்டது. ஆனால் பேட்டிங்கில் அந்த தவறுகளை ஈடுகட்டி விட்டது.

கூடுதல் ரன் தேவை

கூடுதல் ரன் தேவை

இந்தியா மேலும் 20 ரன்களை கூடுதலாக குவித்திருக்க வேண்ட்டும். அருமையான பேட்டிங் பிட்சில், விக்கெட்டுகள் கைவசம் இருந்த நிலையில், இந்தியாவால் கூடுதல் ரன்களை குவிக்க முடியவில்லை. ஓவருக்கு 10 ரன்னுக்கு மேல் எடுக்க வேண்டும் என்ற நிலையை மே.இ.தீவுகளுக்கு இந்தியா அளித்திருக்க வேண்டும்.

பவுலிங் அருமை

பவுலிங் அருமை

இவ்வாறு இந்தியாவால் ரன் எடுக்க முடியாமல் போனதற்கு, பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்படவில்லை என்று கூற முடியாது. தொடக்கம் சிறப்பாக அமைந்தும், இந்தியாவால் இன்னும் பெரிய இலக்கை எட்ட முடியவில்லை என்பதை வைத்து பார்த்தால், மே.இ.தீவுகள் அணி பந்து வீச்சிலும் சிறப்பாக செயல்பட்டுள்ளது என்பதை புரிந்து கொள்ளலாம். இவ்வாறு கவாஸ்கர் தெரிவித்தார்.

இருமுறை தப்பிய சிம்மன்ஸ்

இருமுறை தப்பிய சிம்மன்ஸ்

சிம்மன்ஸ் 18 ரன்கள் எடுத்திருந்தபோது, ஸ்பின்னர் அஸ்வின் வீசிய பந்தில் பும்ராவிடம் கேட்ச் கொடுத்தார். அது நோ-பால் என அறிவிக்கப்பட்டது. பிறகு வேகப்பந்து வீச்சாளர் பும்ரா பந்து வீச்சில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனபோதும் நோ-பால் என தெரியவந்தது. அஸ்வின் வீசிய நோ-பால் பற்றிதான் கவாஸ்கர் விமர்சித்துள்ளார்.

Story first published: Saturday, April 2, 2016, 11:07 [IST]
Other articles published on Apr 2, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+