Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் மோதல்.. யார் வென்றால் இந்தியாவுக்கு செமி பைனல் வாய்ப்பு?

மொகாலி: உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் சூப்பர்-10 சுற்றில் இன்று மொகாலியில், ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் மோதுகின்றன.

இவை இரண்டுமே, இந்தியா இடம்பிடித்துள்ள 2வது குழுவில் உள்ள அணிகளாகும். எனவே இந்த அணிகளின் வெற்றி-தோல்வி இந்திய அணியை எப்படி பாதிக்கும் என்பது குறித்து அறிவதில் ரசிகர்களுக்கு ஆர்வம் இருக்கும்.

சூப்பர்-10 சுற்றில் இந்தியா 3 போட்டிகளில் ஆடி 2 வெற்றிகளுடன் 2வது இடத்திலுள்ளது. ஆனால் ரன் ரேட் -0.546 என்ற அளவில் குறைவாகவே உள்ளது. அதேநேரம் நியூசிலாந்து 3 போட்டிகளில் ஆடி தோல்வியே அடையாமல் +1.283 புள்ளிகளுடன் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

புள்ளிகள்

புள்ளிகள்

ஆஸ்திரேலியா 2 போட்டிகளில் 1ல் வெற்றி பெற்று, +0.108 புள்ளிகளுடனும், பாகிஸ்தான் 3 போட்டிகளில் 1ல் வெற்றி பெற்று, +0.254 புள்ளிகளுடனும் உள்ளது. வங்கதேசம் ஆடிய 3 போட்டிகளிலும் தோற்றுள்ளதால், அந்த அணியால் அரையிறுக்கு செல்ல முடியாது என்பது உறுதியாகிவிட்டது.

பேட்டிங்

பேட்டிங்

இந்நிலையில் ஆஸ்திரேலியாவும்-பாகிஸ்தானும் இன்று மொகாலியில் மோதுகின்றன. டாசில் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்ந்தெடுத்துள்ளது.

பாகிஸ்தான் வெற்றி தேவை

பாகிஸ்தான் வெற்றி தேவை

இப்போட்டியில், எந்த அணி வெற்றி பெற்றாலும் அது இந்தியாவுக்கு பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்தாது. என்றபோதிலும், பாகிஸ்தான் வெல்வது இந்தியாவின், அரையிறுதி வாய்ப்பை பிரகாசப்படுத்தும்.

பாகிஸ்தானுக்கு இன்னும் வாய்ப்பு

பாகிஸ்தானுக்கு இன்னும் வாய்ப்பு

இன்றைய போட்டியில் பாகிஸ்தான் வென்று, ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இந்தியா-ஆஸ்திரேலியா போட்டியில் ஆஸ்திரேலியா வென்றால், ரன் ரேட் அடிப்படையில், அரையிறுதிக்குள் செல்ல பாகிஸ்தானுக்கு வாய்ப்புள்ளது. அதேநேரம், ஆஸ்திரேலியாவோ, இன்றைய போட்டியிலும், இந்தியாவுக்கு எதிரான போட்டியிலும் வென்றாக வேண்டும்.

இந்தியாவுக்கு வெற்றி அவசியம்

இந்தியாவுக்கு வெற்றி அவசியம்

எந்த போட்டி எப்படி போனாலும், ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் போட்டியில் இந்தியா கண்டிப்பாக வென்றேயாக வேண்டிய சூழ்நிலை உள்ளது. காரணம், பிற அணிகளாவது ரன் ரேட்டை வைத்து எதிர்பார்ப்போடு இருக்கலாம். ஆனால், இந்தியாவோ, வெற்றி ஒன்றையே நம்பியாக வேண்டும்.

ஒரே நன்மை இதுதான்

ஒரே நன்மை இதுதான்

இன்றைய போட்டியில் ஆஸ்திரேலியா தோற்கும்பட்சத்தில், அது மனரீதியாக ஆஸ்திரேலியாவுக்கு பின்னடைவாக அமையும். அது ஞாயிற்றுக்கிழமை போட்டியில் இந்தியாவுக்கு சாதகமாக மாறும். அதைத்தான் இப்போது இந்திய ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

Story first published: Friday, March 25, 2016, 16:09 [IST]
Other articles published on Mar 25, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+