Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய அணி தோல்விக்கு பிரபலங்கள் கருத்து சொன்னால் எப்படி இருக்கும்? வாட்ஸ்அப் வறுவல்

சென்னை: உலக கோப்பை டி20 செமி பைனலில் வெஸ்ட் இண்டீசிடம் இந்தியா தோற்றது குறித்து, தமிழக அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் கூறினால் எப்படி இருக்கும் என்று ஒரு கற்பனை கல, கல பதிவு வாட்ஸ்அப்பில் வலம் வருகிறது.

இது தேர்தல் காலம் அல்லவா.. எனவே கலந்து கட்டி இந்த கற்பனை காமெடியை உருவாக்கியுள்ளனர் நெட்டிசன்கள். அதையும்தான் பார்ப்போமே.

World T20: If Tamil political leaders making comments on India West indies match

நாஞ்சில் சம்பத்: இந்த தடவை தோத்தா என்ன. குடியா மூழ்கிபோய்டும். அடுத்த டிவென்டி, டிவென்டி வரட்டும்னு காத்திருக்கோம்.

ராமராஜன்: திமுக பந்து வீச்சு எடுபடவில்லை. நாங்க கொடுத்த பேன் மிக்சி ஓடுது. பந்தும் ஓடுது.

திருமா: ஒடுக்கப்பட்ட கிறிஸ்த்தவ மேற்க்கிந்தியர்களுக்கு கிடைத்த வெற்றி. இந்துத்வா இந்தியர்களுக்கு கிடைத்த தோல்வி. தோழர் சேகுவேராவுக்கு கிடைத்த வெற்றி.

வைகோ: கேப்டன் இருந்தும் தோற்றதை ஏற்றுக்கொள்கிறோம். மது ஒழிக்கப்படாததே தோல்விக்கு காரணம். மாற்று அணி தேவை. நான் பந்து வீசி தொண்டை கிழிய கத்தி அம்பயரிடம் அவுட்டு கேக்கும் போது தண்ணி பாட்டிலை கிரவுண்டுக்குள்ள எரிவதும், சக வீரர்கள் தூங்கியதும் ,குடிகாரர்கள் கிரிக்கெட் கூடாரத்துக்கு வந்ததுமே முக்கிய காரணம்.

தமிழிசை: வெஸ்ட் இன்டீஸ் அணியுடன் பேச்சு வார்த்தை நடைபெற்றுக்கொண்டிருந்தது. அதற்குள் போட்டி முடிந்தது ஏமாற்றம் அளிக்கிறது.

ஈவிகேஎஸ்: டோணியும், கெய்லும் மைதானத்தில் தனியாக பேசியது சந்தேகமாக உள்ளது.

சீமான்: என் தமிழ் தாய் பிள்ளைகள் மான மறவர் கூட்டம் அணியில் இல்லை. மாவீரன் அஸ்வின் மீண்டும் வருவான். தமிழரணி வெல்லும். கிரிக்கெட்டிலிருந்து ஸ்டெம்பை நீக்குவேன். இரட்டை மெழுகுவர்த்தியை நட்டு விளையாட வைப்பேன்.

ஜிகே வாசன்: தனி மரமாக நின்று விளையாடாமல் தென்னந்தோப்பாக ஒன்றிணைந்து களத்தை சந்திக்க வேண்டும். நாங்கள் பந்துவீச சைக்கிள் கொடுக்கப்படவில்லையென கேள்வி எழுப்ப டோணி முன்வர வேண்டும்.

தலிவர்: நாங்கள் வீசிய பழமெனும் பால் நழுவி ஸ்டெம்பில் விழவில்லையென தம்பி டோணி கூறி தப்பிக்க வேண்டும். நானும் டோணியும் நல்ல நண்பர்கள். டோணி தோற்க்கவில்லை மக்கள் தோற்றுவிட்டார்கள்.

குமாரசாமி: இந்த வெற்றி செல்லாது. நம் கணக்குப்படி 50 ரன் வித்தியாசத்தில் இந்தியா வென்றுவிட்டது. ஸ்கோர் போர்டில் கணக்கு தவறானதே நமக்கு தோல்வி.

Story first published: Friday, April 1, 2016, 13:53 [IST]
Other articles published on Apr 1, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+