Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோத்ததை விடுங்க பாஸ்.. நம்ம "தல" சாதனை படைச்சிருச்சு பாருங்க!

நாக்பூர்: உலகக் கோப்பை டி 20 தொடரின் முதல் போட்டியில் இந்தியா ஷாக் தோல்வி.. இதுதான் நேற்று இரவு முழுவதும் நமது ரசிகர்களைத் தூங்க விடாமல் செய்த செய்தி. பவுலர்கள் சிறப்பாக செயல்பட்டபோதும், பேட்ஸ்மென்கள் சொதப்பி விட்டனர். மிகச் சிறிய ஸ்கோரை சேஸ் செய்ய முடியாமல் சுருங்கியது அதிர்ச்சிதான். இருப்பினும் நேற்று கேப்டன் டோணி ஒரு சாதனை படைத்தார்.

முதல் உலகக் கோப்பை முதல் அனைத்து உலகக் கோப்பைத் தொடருக்கும் ஒரு அணிக்குத் தலைமை தாங்கிய ஒரே கேப்டன் என்பதே டோணி நேற்று படைத் சாதனையாகும்.

முதல் டி 20 உலகக் கோப்பை முதல் நேற்று தொடங்கிய 6வது உலகக் கோப்பைத் தொடர் வரை இந்தியாவின் கேப்டனாக டோணிதான் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சாதனைப் போட்டியில் சோதனை

சாதனைப் போட்டியில் சோதனை

இப்படி டோணி சாதனை படைத்தாலும் கூட போட்டியின் முடிவு இந்தியாவுக்குப் பெரும் சோதனையாகவே முடிந்தது. நேற்று இந்தியாவால் டாஸைக் கூட வெல்ல முடியவில்லை என்பது பெரும் சோகமாகும்.

2007 முதல்

2007 முதல்

2007ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் முதல் உலகக் கோப்பை டி 20 போட்டி நடந்தது. அப்போது இளம் படையுடன் டோணி தலைமையிலான இந்திய அணி களம் கண்டது. யாரும் எதிர்பாராத வகையில் அட்டகாசமாக கோப்பையை வென்று வந்தது.

2வது உலகக் கோப்பை

2வது உலகக் கோப்பை

அது, இந்தியாவுக்குக் கிடைத்த 2வது ஐசிசி உலகக் கோப்பையாகும். அதற்கு முன்பு கபில் தேவ் வென்ற ஒரு நாள் உலகக் கோப்பையை மட்டுமே இந்தியா வைத்திருந்தது.

2006 முதல் ஆடுறார்

2006 முதல் ஆடுறார்

கேப்டன் டோணி 2006ம் ஆண்டு முதல் டி20 போட்டிகளில் ஆடி வருகிறார். அவர் பங்கேற்ற முதல் போட்டி தென் ஆப்பிரிக்காவுடன் 2006 டிசம்பரில் நடந்த போட்டியாகும். அதன் பின்னர் இதுவரை 63 போட்டிகளில் அவர் ஆடியுள்ளார்.

2007 முதல் கேப்டன்

2007 முதல் கேப்டன்

2007ம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியின்போது முதல் முறையாக இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார் டோணி. அதன் பின்னர் 2009, 2010, 2012, 2014 ஆகிய ஆண்டுகளில் நடந்த உலகக் கோப்பைத் தொடர்களில் இந்திய அணிக்குத் தலைமை தாங்கினார்.

29 உலகக் கோப்பைப் போட்டிகள்

29 உலகக் கோப்பைப் போட்டிகள்

இதுவரை 29 உலகக் கோப்பைப் போட்டிகளுக்கு கேப்டனாக இருந்துள்ளார் டோணி. அதில், 18 போட்டிகளிளில் வெற்றி கிடைத்துள்ளது. 10 போட்டிகளில் தோல்வி கிடைத்துள்ளது. ஒரு போட்டியில் முடிவு தெரியவில்லை.

கடந்த தொடரில் இறுதி வரை

கடந்த தொடரில் இறுதி வரை

கடந்த உலகக் கோப்பைப் போட்டித் தொடரில் இறுதிப் போட்டி வரை இந்தியாவைக் கொண்டு வந்தார் டோணி. அங்கு இலங்கையிடம் இந்தியா தோல்வியுற்றது.

ஒரே கேப்டன்

ஒரே கேப்டன்

ஐசிசியின் 3 முக்கிய கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன் என்ற சாதனையும் டோணியிடம் மட்டுமே உள்ளது. உலகக் கோப்பை, உலகக் கோப்பை டி 20 மற்றும் சாம்பியன்ஸ் டிராபி ஆகியவற்றை டோணி வென்றுள்ளார்.

Story first published: Thursday, March 17, 2016, 9:50 [IST]
Other articles published on Mar 17, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+