Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி மார்ச் 8-ல் தொடக்கம்! இந்தியா- பாக் மார்ச் 19-ல் மோதல்!!

மும்பை: டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவில் அடுத்த ஆண்டு மார்ச் 8-ந் தேதி தொடங்குகிறது. இந்தியா முழுவதும் 7 மைதானங்களில் ஏப்ரல் 3-ந் தேதி வரை இப்போட்டிகள் நடைபெற உள்ளன. தர்மசாலாவில் மார்ச் 19-ந் தேதியன்று இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளை இந்தியா முதல் முறையாக நடத்துகிறது. இந்த போட்டி தொடர்பான விவரங்களை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று அறிவித்தது.

குரூப் ஏ,பி

குரூப் ஏ,பி

மொத்தம் 16 அணிகள் இந்த போட்டியில் பங்கேற்கின்றன. முதல் சுற்றுக்கான குரூப் ஏ பிரிவில் வங்கதேசம், நெதர்லாந்து, அயர்லாந்து, ஓமன் அணிகள் இடம்பெறுள்ளன.

குரூப் பி பிரிவில் ஜிம்பாப்வே, ஹாங்ஹாங், ஸ்காட்லாந்த், ஆப்கானிஸ்தான் அணிகள் இடம்பெற்றுள்ளன. இந்த 2 பிரிவுகளில் முதலிடம் பெறும் 2 அணிகள் சூப்பர் 10 குரூப்புடன் இணைந்து கொள்ளும்.

சூப்பர் 10 குரூப்

சூப்பர் 10 குரூப்

சூப்பர் 10 குரூப் 1-ல் இலங்கை, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகளும் சூப்பர் 10 குரூப்-2ல் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளும் உள்ளன. இந்த சூப்பர் 10-பிரிவுகளில் முதல் 2 இடங்களுக்கு வரும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும்.

செமி பைனல், பைனல்

செமி பைனல், பைனல்

அரை இறுதிப் போட்டிகள் டெல்லி மற்றும் மும்பையில் மார்ச் 30, 31 தேதிகளில் நடைபெறும். இறுதிப் போட்டிகள் கொல்கத்தாவில் ஏப்ரல் 3-ந் தேதி நடைபெறும்.

7 மைதானங்கள்

7 மைதானங்கள்

பெங்களூர், தர்மசாலா, கொல்கத்தா, மொகாலி, மும்பை, நாக்பூர், டெல்லி என 7 மைதானங்களில் இந்த போட்டிகள் நடைபெற உள்ளன.

முதல் சாம்பியன் இந்தியா

முதல் சாம்பியன் இந்தியா

2007ஆம் ஆண்டு முதன் முறையாக தென்னாப்பிரிக்காவில் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. அதில் பாகிஸ்தானை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

2009-ல் பாகிஸ்தான்

2009-ல் பாகிஸ்தான்

2009 அம் ஆண்டு டி20 போட்டியில் இலங்கையை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் சாம்பியனானது. 2010ஆம் ஆண்டு இங்கிலாந்தும் 2012ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணியும் 2014ஆம் ஆண்டு இலங்கையும் சாம்பியன் பட்டம் வென்றன.

இந்தியா- பாக் மேட்ச்

இந்தியா- பாக் மேட்ச்

தர்மசாலாவில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மார்ச் 19-ந் தேதி மோதுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, December 11, 2015, 17:13 [IST]
Other articles published on Dec 11, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+