Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்: இன்று மழை வந்தால் நேரடியாக பைனலுக்கு போகும் இந்தியா!

டாக்கா: 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் 2வது அரை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை இந்தியா இன்று எதிர்கொள்கிறது. ஆனால் இன்றும் ஆட்டத்தின் போது மழை குறுக்கிடக் கூடும் என எச்சரிக்கப்பட்டிருப்பதால் இந்தியா நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறக் கூடும்.

வங்கதேசத்தில் நடைபெற்று வரும் 20 ஓவர் உலக கோப்பை இறுதிக் கட்டத்தை நெருங்கிவிட்டது. சூப்பர் 10 லீக் சுற்றின் முடிவில் முதல் பிரிவில் இருந்து இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்கா அரை இறுதிக்குத் தகுதி பெற்றன. 2வது பிரிவில் இந்தியா, நடப்பு சாம்பியனான மேற்கிந்திய தீவுகள் அரை இறுதிக்கு முன்னேறின.

நேற்று நடைபெற்ற முதலாவது அரை இறுதியில் மேற்கிந்திய தீவுகள் அணியும் இலங்கை அணியும் மோதின. இந்தப் போட்டியில் மழை குறுக்கிட்டதால் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி இலங்கை அணி வென்றதாக அறிவிக்கப்பட அது இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

இந்தியா- தென்னாப்பிரிக்கா மோதல்

இந்தியா- தென்னாப்பிரிக்கா மோதல்

இன்று 2வது அரை இறுதிப் போட்டியில் இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் மோதுகின்றன. டோணி தலைமையிலான இந்திய அணி 4 லீக் ஆட்டங்களில் வென்று அரை இறுதிக்கு முன்னேறி இருக்கிறது.

தோல்வியே சந்திக்காத அணி

தோல்வியே சந்திக்காத அணி

நடப்பு தொடரில் தோல்வியை சந்திக்காத ஒரே அணி என்ற பெருமை இந்திய அணிக்கு உண்டு.

சாதக அம்சங்கள்

சாதக அம்சங்கள்

உலக கோப்பை போன்ற பெரிய போட்டித் தொடரில் தென்னாப்ரிக்கா சாதித்ததில்லை என்பது இந்தியாவுக்கு சாதகமான அம்சம். பயிற்சியில் காயம் அடைந்த யுவராஜ் முழு உடல்தகுதியுடன் விளையாட தயாராக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது மற்றொரு சாதகம்.

இழந்த பெருமையை மீட்குமா?

இழந்த பெருமையை மீட்குமா?

நியூசிலாந்து தொடர்களிலும், ஆசிய கோப்பையிலும் ஏமாற்றம் தந்த இந்தியா, 20 ஓவர் உலக கோப்பையை 2வது முறையாக வென்று பெருமை சேர்க்குமா? என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

மழை குறுக்கிட்டால்..

மழை குறுக்கிட்டால்..

இன்றைய போட்டியின் போதும் மழை குறுக்கிட்டால் 2வது பிரிவில் 8 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருப்பதால் இந்திய அணி நேரடியாக இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுவிடும். முதல் பிரிவில் தென்னாப்பிரிக்கா 6 புள்ளிகள் பெற்று இருக்கிறது.

மழைக்கு 70% வாய்ப்பு..

மழைக்கு 70% வாய்ப்பு..

இன்று அனேகமாக 70% மழைக்கு வாய்ப்பிருக்கிறது என்று வங்கதேச நாட்டின் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதனால் இன்றைய போட்டிக்கான டாஸே போடாவிட்டாலும் இந்திய அணி இறுதிக்கு இயல்பாகவே தகுதி பெற்றுவிடும்.

Story first published: Friday, April 4, 2014, 17:17 [IST]
Other articles published on Apr 4, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+