Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எனது சிறந்த ஆட்டம் இதுதான்.. உணர்ச்சிவசப்படும் கோஹ்லி

மொகாலி: என்னுடைய மிகச்சிறந்த 3 ஆட்டங்களில் இதுவும் ஒன்று. இப்போது நான் உணர்ச்சி பெருகும் நிலையில் உள்ளதால், இதை எனது மிகச்சிறந்த ஆட்டம் என்றும் கூட கூறிவிடுவேன் என்று விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார்.

உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியின் வாழ்வா-சாவா ஆட்டத்தில் இந்தியா-ஆஸ்திரேலியா நேற்று மொகாலியில் மோதின. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 160 ரன்களை குவித்தது.

2வது பேட் செய்த இந்திய அணி, 19.1 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது. துணை கேப்டன் கோஹ்லி அதிகபட்சமாக 51 பந்துகளில் 82 ரன்கள் குவித்து அவுட்-ஆகாமல் களத்தில் நின்று அணியின் வெற்றிக்கு உதவினார்.

அதிரடி ஆட்டம்

அதிரடி ஆட்டம்

கோஹ்லி இன்னிங்சில் 2 சிக்சர்கள் மற்றும் 9 பவுண்டரிகளும் அடங்கும். கடைசி 18 பந்துகளில் 39 ரன்கள் தேவை என்ற நிலையில், விஸ்வரூபம் எடுத்த கோஹ்லி, கடைசி ஓவரில் 4 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலைக்கு ஆட்டத்தை கரைசேர்த்து கொண்டு வந்தார். மறுமுனையில் நின்ற டோணி, கடைசி ஓவரின் முதல் பந்தில், வின்னிங் ஷாட் அடிக்க போட்டி சுபமாக முடிந்தது.

சிறந்த ஆட்டம்

சிறந்த ஆட்டம்

காலிறுதி என்று வர்ணிக்கப்பட்ட இப்போட்டி முடிந்த பிறகு வர்ணனையாளரிடம் பேசிய கோஹ்லி, இந்த ஆட்டம் தனது சிறந்த ஆட்டங்களில் ஒன்று என்று சிலாகித்தார்.

உணர்ச்சி மிகுதி

உணர்ச்சி மிகுதி

கோஹ்லி மேலும் கூறியதாவது: என்னுடைய மிகச்சிறந்த 3 ஆட்டங்களில் இதுவும் ஒன்று. இப்போது நான் உணர்ச்சி பெருகும் நிலையில் உள்ளதால், இதை எனது மிகச்சிறந்த ஆட்டம் என்றும் கூட கூறிவிடுவேன்.

ரசிகர்கள் ஆரவாரம்

ரசிகர்கள் ஆரவாரம்

நான் மொகாலி ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். அவர்களின் ஆதரவு கோஷம் எங்களை முன்னோக்கி முன்னேற தூண்டியது. ரன்களை குவிக்க வேண்டும் என்ற வேட்கையை தூண்டியது. மொகாலியில் எப்போதுமே ரசிகர்கள் தீயாக கோஷமிடுவார்கள்.

தூண்டுதல்

தூண்டுதல்

ரசிகர்களுக்காகத்தான் நாங்கள் கிரிக்கெட் ஆடுகிறோம். எனவே இக்கட்டான நேரங்களில் அவர்களை திருப்திப்படுத்த வேண்டும் என்ற வெறி ஏற்பட்டு சிறப்பாக ஆட தூண்டுகிறது. இவ்வாறு கோஹ்லி தெரிவித்தார்.

Story first published: Monday, March 28, 2016, 11:54 [IST]
Other articles published on Mar 28, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+