Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆஸ்திரேலியாவை மட்டும் ஓட, ஓட விரட்டி அடிக்கிறாரே கோஹ்லி.. ஏன், எப்படி தெரியுமா?

மும்பை: ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விராட் கோஹ்லி, நாயடி, பேயடி அடித்து ரன் குவித்து வருகிறார். ஆஸ்திரேலியாவில் கடைசியாக நடந்த டெஸ்ட் தொடரில் இருந்து, டி20 தொடர் வரை இதற்கு பல உதாரணத்தை காட்ட முடியும்.

கடந்த 4 டி20 போட்டிகளை மட்டுமே எடுத்துக்கொண்டால் கூட, நான்கிலும், விராட் கோஹ்லி, அரை சதம் கடந்து அசத்தியுள்ளார்.

20 ஓவர் போட்டியில், 50 ரன்களை கடப்பது என்பது ஒருநாள் போட்டியில் சதம் அடிப்பதைவிட அரிதான விஷயம். அதிலும் ஓப்பனிங்கில் இறங்காத ஒரு வீரர் இந்த சாதனையை தொடர்ச்சியாக படைத்து வந்துள்ளது, கோஹ்லியின் திறமையை பறைசாற்றும் மற்றொரு ஆவணம்.

ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம்

ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம்

கடந்த ஜனவரியில் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் செய்த இந்திய அணி, 5 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் ஆடியது. முதல் 4 ஒருநாள் போட்டியிலும் ஆஸ்திரேலியா வென்ற நிலையில், கடைசி ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவின் 330 ரன்களை 4 விக்கெட் இழப்பிற்கு சேஸ் செய்து கலக்கி வென்றது இந்தியா.

கோஹ்லி ஜொலிப்பு

கோஹ்லி ஜொலிப்பு

இதன்பிறகு நடைபெற்ற 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில், 3 போட்டிகளையும் இந்தியா வென்று அசத்தியது. ஒன்டேக்களை போலவே, டி20 போட்டிகளிலும், விராட் கோஹ்லிதான் ஜொலித்தார்.

90 ரன்கள்

90 ரன்கள்

ஜனவரி 26ம் தேதி, அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில், இந்தியா 188 ரன்களை குவித்தது. விராட் கோஹ்லி 55 பந்துகளில் 90 ரன்களை குவித்து நாட்-அவுட்டாக நின்று அசத்தினார். இதில் இந்தியா 37 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

அடுத்த ஃபிப்டி

அடுத்த ஃபிப்டி

எம்.சி.ஜி மைதானத்தில் ஜனவரி 29ம் தேதி நடைபெற்ற 2வது டி20 போட்டியில் இந்தியா 184 ரன்கள் குவித்தது. இப்போட்டியில் கோஹ்லி 33 பந்துகளில் 59 ரன்கள் எடுத்து நாட்-அவுட்டாக களத்தில் நின்றார். 27 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது.

மற்றொரு அரை சதம்

மற்றொரு அரை சதம்

ஜனவரி 31ம் தேதி சிட்னி மைதானத்தில் நடைபெற்ற கடைசி டி20 போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 197 ரன்களை குவித்தது. ஆனால், சேஸ் செய்த இந்தியா கோஹ்லியின் 36 பந்துகளில் கிடைத்த 50 ரன்கள் உதவியோடு ஆட்டத்தின் கடைசி பந்தில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

தகிட தகிட

தகிட தகிட

இந்நிலையில், மொகாலியில், நேற்று நடைபெற்ற உலக கோப்பை டி20 கிரிக்கெட் சூப்பர்-10 சுற்றில், கோஹ்லி 51 பந்துகளில் 82 ரன்கள் குவித்தார். இப்போட்டியில் இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.

அவுட் செய்யவே முடியல

அவுட் செய்யவே முடியல

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கடைசியாக மோதிய 4 டி20 போட்டிகளிலுமே அரை சதம் கடந்துள்ளார் விராட் கோஹ்லி. அதில் சிட்னி டி20 தவிர்த்த பிற 3 போட்டிகளிலுமே, கோஹ்லியை ஆஸ்திரேலியாவால் அவுட் செய்யவே முடியவில்லை.

கோஹ்லியின் பதிலடி

கோஹ்லியின் பதிலடி

ஆஸ்திரேலியாவை குறி வைத்து கோஹ்லி அடிக்க முக்கிய காரணம், அந்த அணி வீரர்கள் ஆக்ரோஷமாக நடந்துகொள்வதுதான். கோஹ்லியும் இதை ஒப்புக்கொண்டுள்ளார். ஆக்ரோஷமான வீரர்களுக்கு எதிராக ஆக்ரோஷமாக ஆடுவதுதான் எனக்கு பிடிக்கும் என்கிறார் கோஹ்லி. இப்போது சொல்லலாம்தானே, கோஹ்லி ஜீனியஸ் என்று..?

Story first published: Monday, March 28, 2016, 12:05 [IST]
Other articles published on Mar 28, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+