Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"ஷாக்"குக்குக் காரணம் 'பேட்ஸ்மென்'தான்.. குற்றம் சாட்டும் டோணி

நாக்பூர்: நியூசிலாந்துக்கு எதிரான முதல் உலகக் கோப்பை டி 20 போட்டியில் இந்தியாவுக்கு அதிர்ச்சித் தோல்வி கிடைக்க "பேட்ஸ்மென்"கள்தான் காரணம் என்று கேப்டன் டோணி கூறியுள்ளார்.

நியூசிலாந்துக்கு எதிராக டி 20 போட்டியில் இந்தியா இதுவரை என்ற போதிலும் கூட உள்ளூரில் நடைபெறும் போட்டி என்பதாலும் தற்போது இந்தியா நல்ல பார்மில் உள்ளதாலும், கோஹ்லி உள்ளிட்ட வீரர்கள் சூப்பராக ஆடுவார்கள் என்ற நம்பிக்கையிலும் இந்திய ரசிகர்கள் பெருத்த எதிர்பார்ப்பில் இருந்தனர்.

அதற்கேற்ப இந்திய பந்து வீச்சாளர்கள் முதலில் சிறப்பாக பந்து வீசி 126 ரன்களுக்கு நியூசிலாந்தை சுருட்டினர். இதனால் நிச்சயம் இந்தியா வெல்லும் என்ற நம்பிக்கை பிறந்தது. ஆனால் மட்டையாளர்கள் கட்டையைக் கொடுத்து விட்டனர், கவிழ்த்து விட்டனர்.

பேட்டிங் தப்பு

பேட்டிங் தப்பு

உலகப் புகழ் பெற்ற இந்திய அணியின் பேட்டிங் வரிசை நேற்று சொதப்பி விட்டது ரசிகர்களை கவலைக்குள்ளாக்கியுள்ளது. கேப்டன் டோணிக்கும் அது கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

தப்பு தப்பான ஷாட்

தப்பு தப்பான ஷாட்

இதுகுறித்து டோணி கூறுகையில் நமது பேட்டிங்தான் நமது தோல்விக்குக் காரணம். ஷாட் செலக்ஷன் முற்றிலும் தவறாக இருந்தது.

நம்பிக்கையோடு இருந்தேன்

நம்பிக்கையோடு இருந்தேன்

நியூசிலாந்தை சிறிய ஸ்கோரில் முடக்கி விட்டதால் நம்பிக்கையோடு இருந்தேன். ஆனால் பேட்டிங் கை விட்டு விட்டது. சரியாக நாம் ஆடவில்லை.

சிறப்பான பந்து வீச்சு

சிறப்பான பந்து வீச்சு

நியூசிலாந்து பவுலர்கள் சிறப்பாக பந்து வீசினர். நமது பேட்ஸ்மென்களை தொடர்ந்து நெருக்கடியில் வைத்திருந்தனர். சூழலை தங்களுக்குச் சாதகமாக மாற்றிக் கொண்டனர்.

அடாப்ட் ஆகவில்லை

அடாப்ட் ஆகவில்லை

ஆனால் நாம் சரியாக அடாப்ட் ஆகவில்லை. சுதாரிக்கவில்லை. மொத்தத்தில் நமது அதிர்ச்சித் தோல்விக்கு பேட்டிங் மட்டுமே காரணம் என்றார் டோணி.

Story first published: Thursday, March 17, 2016, 9:50 [IST]
Other articles published on Mar 17, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+