Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மீண்டும் மீண்டும் மிரட்டிய ஆப்கானிஸ்தான்.. தோற்றாலும் வீரனாக நாடு திரும்புகிறது

டெல்லி: ஆப்கானிஸ்தான் அணிக்கு மிகப் பெரிய எதிர்காலம் இருக்கிறது என்பதை இந்த டி20 உலகக் கோப்பைத் தொடர் உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது. தான் விளையாடி ஒரு போட்டியில் கூட அது வெற்றி பெறவில்லை என்றாலும் கூட ஒரு போட்டியில் கூட அது தனது வீரப் போராட்டத்தை வெளிப்படுத்தத் தவறவில்லை என்பதுதான் முக்கியமானது.

3 போட்டிகளில் ஆடி மூன்றிலும் ஆப்கானிஸ்தானுக்குத் தோல்விதான். ஆனால் எதிராளிகளை ஒரு போட்டியில் கூட அது ஈஸியாக ஜெயிக்க விடவில்லை என்பது முக்கியமானது.

நேற்றும் கூட அது இங்கிலாந்தை பயமுறுத்தி விட்டது. பய பீதியில் ஆழ்த்தித்தான் இங்கிலாந்தை அது ஜெயிக்க விட்டது.

வெறும் 15 ரன்னில் வெற்றி

வெறும் 15 ரன்னில் வெற்றி

கிரிக்கெட்டின் தாயகமே இங்கிலாந்துதான். ஆனால் அவர்கள் குடித்த பாலை நேற்று கக்க வைத்து விட்டார்கள் ஆப்கானிஸ்தானியர்கள். அப்படி ஒரு ஆட்டம். நெருக்கடியைக் கொடுத்து இங்கிலாந்தை பிழிந்து விட்டனர். வெறும் 15 ரன் வித்தியாசத்தில்தான் இங்கிலாந்து நேற்று வெற்றி பெற்றது.

மொயீன் அலி இல்லாவிட்டால்

மொயீன் அலி இல்லாவிட்டால்

மொயீன் அலி இல்லாவிட்டால் இங்கிலாந்து கஷ்டப்பட்டுப் போயிருக்கும். அவர் சிறப்பாக ஆடி 41 ரன்களைக் குவித்தார். அதேபோல டிவிட் வில்லி 20 ரன்களைச் சேர்த்தார்.

7 விக்கெட்டுக்கு 142

7 விக்கெட்டுக்கு 142

இப்படியாக விளையாடிய இங்கிலாந்து 7 விக்கெட் இழப்புக்கு 142 ரன்களைச் சேர்த்தது. ஆனால் அதன் பிறகுதான் ஆப்கானிஸ்தான் பேட்டிங் அவர்களை சோதித்து ிட்டது.

கடுமையாக போராடிய ஆப்கானிஸ்தான்

கடுமையாக போராடிய ஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தான் வீரர்கள் கடுமையாகப் போராடினர். எளிதாக விட்டுக் கொடுக்க அவர்கள் விரும்பவில்லை. ஒவ்வொரு பேட்ஸ்மேனும் முடிந்தவரை ரன் எடுக்க முயற்சித்த பின்னர்தான் அவுட்டாகினர்.

பயமே இல்லை

பயமே இல்லை

இங்கிலாந்து பந்து வீச்சை அவர்கள் மிக ஈஸியாக எதிர்கொண்டனர். இதனால் ரன்களும் வந்தவண்ணம் இருந்தன. இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்களை இழந்து 127 ரன்களை எடுத்தது ஆப்கானிஸ்தான்.

சபிக்குல்லாவின் சபாஷ் ஆட்டம்

சபிக்குல்லாவின் சபாஷ் ஆட்டம்

ஆட்டத்தின் இறுதியில் சபிக்குல்லா 20 பந்துகளில் 35 ரன்களை விளாசி இங்கிலாந்தை மிரள வைத்து விட்டார். ஆனால் அவரது ஆட்டம் போதுமானதாக இல்லை. ஆப்கானிஸ்தான் தோல்வியைத் தழுவியது.

தொடரிலிருந்து வெளியேற்றம்

தொடரிலிருந்து வெளியேற்றம்

ஆப்கானிஸ்தான் அணி இதுவரை தான் ஆடிய 3 போட்டிகளிலும் தோற்று விட்டதால் இந்தத் தொடரிலிருந்து அது வெளியேறுகிறது.. அதேசமயம், விமர்சகர்களின் பாராட்டுக்களுடன்!

Story first published: Thursday, March 24, 2016, 10:28 [IST]
Other articles published on Mar 24, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+