என்னத்த விளையாடினீங்க: 'அப்ரிதி அன்ட் கோ'வை வறுத்தெடுத்த பாக். ஊடகங்கள்
இஸ்லாமாபாத்: இந்தியாவுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை போட்டியில் தோல்வி அடைந்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை அந்நாட்டு ஊடகங்கள் கடுமையாக விமர்சித்துள்ளன.
இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதிய டி20 உலகக் கோப்பை போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டோணி தலைமையிலான இந்திய அணி ஷாஹித் அப்ரிதி தலைமையிலான பாகிஸ்தான் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
அப்ரிதி அணி தோல்வி அடைந்ததை அறிந்த பாகிஸ்தான் ரசிகர்கள் கோபம் அடைந்தனர்.

மீடியாக்கள்
அப்ரிதி மற்றும் வீரர்கள் இந்தியாவிடம் தோல்வி அடைந்தது பற்றி பாகிஸ்தான் ஊடகங்கள் கடுமையாக விமர்சித்து செய்தி வெளியிட்டுள்ளன. அதே சமயம் டி20 உலகக் கோப்பை பெண்கள் போட்டியில் இந்திய அணியை வீழ்த்திய பாகிஸ்தான் அணியை ஊடகங்கள் பாராட்டியுள்ளன.

தோல்வி
அமிதாப் பச்சன், ஷபாகத் அமானத் அலி தங்கள் நாட்டு தேசிய கீதங்களை பாடி துவக்க விழா பிரமாண்டமாக நடந்துள்ளது. ஆனால் போட்டியில் இந்திய அணியிடம் பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்துள்ளது என்று ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்கள் அணி
இந்திய பெண்கள் அணிக்கு எதிரான டி20 உலகக் கோப்பை போட்டியில் சனா மிர் தலைமையிலான பாகிஸ்தான் பெண்கள் அணி ஒன்றும் எளிதில் வெற்றி பெறவில்லை. இருப்பினும் அவர்கள் சிறப்பாக விளையாடி வென்றுள்ளனர் என்று செய்தி வெளியாகியுள்ளது.

அப்ரிதி
கேப்டன் அப்ரிதி வழக்கமாக எதை செய்வாரோ அதை தான் தற்போதும் செய்துள்ளார். பேட்டிங்கிலும் சரி, பவுலிங்கிலும் சரி அப்ரிதி சொதப்பிவிட்டார். மைதானத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பதிலும் சிரமப்பட்டுள்ளார் என்று பாகிஸ்தான் செய்தித்தாள் ஒன்று தெரிவித்துள்ளது.

எதிர்பார்த்தது தான்
தற்போது பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தை தோற்கடித்தால் தான் அரையிறுதிக்கு செல்ல முடியும். டி20 போட்டிகளில் பாகிஸ்தான் அணி பிற அணிகளுடன் ஒப்பிடுகையில் அதள பாதாளத்தில் விழுந்துவிட்டது. இதில் கொடுமை என்னவென்றால் இந்த தோல்வி எதிர்பார்த்தபடியே இருந்தது தான் என்று பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.


Click it and Unblock the Notifications