Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஸ்பின்னை கண்டு அஞ்சுகிறதா இந்தியா? 9 விக்கெட்டுகளை சுழல் பந்துக்கு பறிகொடுத்த சோகம்

நாக்பூர்: இந்திய மண்ணுக்கே வந்து, இந்திய அணியை ஸ்பின் மூலம் சாய்த்துக் காட்ட முடியும் என்று நிரூபித்துள்ளது நியூசிலாந்து கிரிக்கெட் அணி.

ஆஸ்திரேலிய மண்ணில் வேகப்பந்து வீச்சை சமாளித்து 3-0 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் செய்த இந்தியா, உள்ளூர் தொடரில் இலங்கையை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தியது.

இதையடுத்து ஆசிய கோப்பை தொடரில் ஒரு போட்டியில் கூட தோற்காமல் கோப்பையை வென்று அசத்தியது. கடைசியாக இந்தியா ஆடிய (நேற்றைய போட்டியை தவிர்த்து) 11 போட்டிகளில் 10 போட்டிகளை வென்ற களிப்போடு, உலக கோப்பையில் காலடி எடுத்து வைத்தது இந்தியா.

அதிர்ச்சி தோல்வி

அதிர்ச்சி தோல்வி

நியூசிலாந்துக்கு எதிராக நேற்று நடைபெற்ற முதல் சூப்பர்-10 போட்டியில் 126 ரன்களில் நியூசிலாந்தை மடக்கியது இந்தியா. ஆனால், 18.1 ஓவர்களில் 79 ரன்களில் ஆல்-அவுட் ஆகி, 47 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியடைந்தது.

ஸ்பின்னால் சுருண்டது

ஸ்பின்னால் சுருண்டது

உலக தரம் வாய்ந்த இந்திய பேட்ஸ்மேன்கள் திடீரென சொதப்ப காரணம், நியூசிலாந்தின் ஸ்பின்னர்கள்தான். மொத்தம் 3 ஸ்பின்னர்களோடு களமிறங்கிய நியூசிலாந்தின் வியூகத்திற்கு வெற்றி கிடைத்துவிட்டது.

சுழல் சிக்கல்

சுழல் சிக்கல்

ஸ்பின்னுக்கு எதிராக இந்திய வீரர்கள் சிறப்பாக ஆடுவார்கள் என்பதெல்லாம் பழைய கதை. இப்போது வேகப்பந்தைதான் அதிகம் விளாசுகிறார்கள் இந்திய அணியினர்.

இப்படித்தான் நடந்தது

இப்படித்தான் நடந்தது

ஆஸ்திரேலிய மண்ணில் அந்த அணியை சம்ஹாரம் செய்துவிட்டு வந்த இந்திய அணி, இலங்கைக்கு எதிராக உள்ளூர் தொடரின் முதல் போட்டியில் நேற்றைய ஆட்டத்தை போலத்தான் சொதப்பி தோற்றது. காரணம், இலங்கையின் ஸ்பின், வேகம் கூட்டணி அப்படி.

9 விக்கெட்டுகள்

9 விக்கெட்டுகள்

நியூசிலாந்துக்கு எதிரான நேற்றைய போட்டியில் இந்திய அணியின் 9 விக்கெட்டுகள் ஸ்பின்னுக்குத்தான் வீழ்ந்துள்ளன. போனால் போகட்டும் என்ற வகையில், கடைசி விக்கெட்டான ஆஷிஷ் நெஹ்ரா மட்டும், மில்னேயின் வேகப்பந்து வீச்சுக்கு விக்கெட்டை பறிகொடுத்தார்.

பலே பட்டியல்

பலே பட்டியல்

நியூசிலாந்தின் இடது கை ஸ்பின்னர் மிட்சேல் சான்டர் 11 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளையும், சீனியர் ஸ்பின்னர் மெக்கல்லம் 15 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளையும், இந்திய வம்சாவளியை சேர்ந்த ஸ்பின்னரான, சோடி 18 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினர்.

சேவாக் சொன்னது தெரியுமா

சேவாக் சொன்னது தெரியுமா

"ஸ்பின் என்று ஒரு வகை பந்தே கிடையாது.. பந்து பிட்ச் ஆனால்தானே சுழல முடியும். பிட்ச் ஆகும் முன்பே அதை விளாசிவிடுவதுதான் எனது பாலிசி" என்று இந்திய முன்னாள் அதிரடி வீரர் சேவாக் ஒருமுறை கூறியதை டோணி அன்டு கோ தற்போது நினைவில் வைத்தால் நலம்.

Story first published: Thursday, March 17, 2016, 9:49 [IST]
Other articles published on Mar 17, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+