Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒரே கல்லிலில் 2 மாங்காய் அடித்த இங்கிலாந்து...!

டெல்லி: இலங்கை அணியை நேற்றைய டி20 உலகக் கோப்பைப் போட்டி லீக் ஆட்டத்தில் தோற்கடித்ததன் மூலம் இலங்கையை மட்டுமல்லாமல், தென் ஆப்பிரிக்காவையும் சேர்த்து உலகக் கோப்பைத் தொடரை விட்டு விரட்டியுள்ளது இங்கிலாந்து.

மிக மிக விறுவிறுப்பாக நடந்த இந்தப் போட்டியில் இங்கிலாந்து தனது திறமையைக் காட்டி நடப்புச் சாம்பியன் இலங்கையை 10 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

இந்தத் தோல்வி காரணமாக உலகக் கோப்பைத் தொடரிலிருந்து இலங்கை வெளியேற்றப்பட்டுள்ளது. கூடவே தென் ஆப்பிரிக்காவும் வெளியேற்றப்பட்டுள்ளது.

171 ரன்

171 ரன்

ஜோ பட்லர் அபாரமாக ஆடி 37 பந்துகளில் 66 ரன்களைக் குவித்ததால், இங்கிலாந்து அணி 171 ரன்களைக் குவித்தது. அதன் பின்னர் ஆடிய இலங்கை அணி சிறப்பாகவே துரத்தி வந்தது. ஆனால் 161 ரன்களில் அதை முடக்கியது இங்கிலாந்து.

2வது அணியாக அரை இறுதிக்குத் தகுதி

2வது அணியாக அரை இறுதிக்குத் தகுதி

இந்த வெற்றியின் மூலமாக முதல் பிரிவிலிருந்து அரை இறுதிக்குத் தகுதி பெற்ற 2வது அணியாக இங்கிலாந்து உருவெடுத்தது. ஏற்கனவே மேற்கு இந்தியத் தீவுகள் அணி அட்டகாசமாக ஆடி அரை இறுதிக்குள் நுழைந்து விட்டது குறிப்பிடத்தக்கது.

இலங்கை, தென் ஆப்பிரிக்கா வெளியேற்றம்

இலங்கை, தென் ஆப்பிரிக்கா வெளியேற்றம்

இப்போட்டியில் இலங்கை வென்றிருந்தால், தென் ஆப்பிரிக்காவுக்கும், அரை இறுதிக்கான ஒரு சான்ஸ் கிடைத்திருக்கும். ஆனால் தவிடு பொடியானது. இரண்டு பேரும் சேர்ந்து தற்போது வெளியேற்றப்பட்டு விட்டனர்.

ஆளுக்கு 2 புள்ளிகள்

ஆளுக்கு 2 புள்ளிகள்

இலங்கை அணியும், தென் ஆப்பிரிக்காவும் தற்போது தலா 2 புள்ளிகளுடன் மட்டுமே உள்ளனர். அதேசமயம், மேற்கு இந்தியத் தீவுகள் அணி 3 போட்டிகளிலிருந்து 6 புள்ளிகளும், இங்கிலாந்து 4 போட்டிகளிலிருந்து 6 புள்ளிகளும் பெற்று அரை இறுதிக்குள் புகுந்து விட்டன.

வெஸ்ட் இண்டீஸுக்கு முதலிடம்

வெஸ்ட் இண்டீஸுக்கு முதலிடம்

மேற்கு இந்தியத் தீவுகளுக்கு இன்னும் ஒரு போட்டி பாக்கியுள்ளது. அதாவது ஆப்கானிஸ்தானுடன் அது மோத வேண்டியுள்ளது. நிச்சயம் அதில் வென்று தனது பிரிவில் முதலிடத்தை அது பெறும்.

இங்கிலாந்து - நியூசிலாந்து மோதலுக்கு வாய்ப்பு

இங்கிலாந்து - நியூசிலாந்து மோதலுக்கு வாய்ப்பு

இப்பிரிவில் இங்கிலாந்து அணி 2வது இடம் பெறும். அப்படி நடந்தால், 2வது பிரிவில் முதலிடத்தில் உள்ள நியூசிலாந்துடன் அது அரை இறுதியில் மோதும் வாய்ப்பு உருவாகும்.

வெஸ்ட் இண்டீஸுடன் மோதப் போவது யார்?

வெஸ்ட் இண்டீஸுடன் மோதப் போவது யார்?

மறுபக்கம் மேற்கு இந்தியத் தீவுகள் அணி, 2வது பிரிவில் 2வது இடத்தைப் பெறும் அணியுடன் மோதும். அந்த இடத்திற்குத்தான் தற்போது இந்தியா, ஆஸ்திரேலியா இடையே கடும் மோதல் உள்ளது. இன்று நடைபெறும் போட்டியில் எந்த அணி வெல்கிறதோ அந்த அணியே 2வது இடத்தைப் பிடித்து அரை இறுதிக்குள் செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, March 27, 2016, 11:23 [IST]
Other articles published on Mar 27, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+