இந்திய அணியினருக்கு "புது சொக்கா" போட்டு அழகு பார்க்கும் பிசிசிஐ!
பெங்களூரு: டுவென்டி 20 உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய அணி புத்தம் புது மெருகுடன் கூடிய சீருடையை அணிந்து விளையாடப் போகிறது.
இந்திய அணியினருக்கான புதிய சீருடை உள்ளிட்டவற்றை பிசிசிஐ இன்று பெங்களூரில் அறிமுகப்படுத்தியது.
ஆடவர் அணிக்கும், மகளிர் அணியினருக்கும் சீருடையில் சிறிய மாற்றத்தை செய்து அதுதொடர்பான புகைப்படத்தையும் பிசிசிஐ டிவிட்டரில் போட்டுள்ளது.

சேஸ் கிரேட்னஸ்
இந்தப் புகைப்படத்திற்கு சேஸ் கிரேட்னஸ் என்று பெயரும் சூட்டியுள்ளது பிசிசிஐ. இப்படத்தில் டோணி, விராத் கோஹ்லி, ரஹானே, அஸ்வின், ஜடேஜா, உமேஷ் யாதவ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

மகளிர் அணியினரும்
அதேபோல மகளிர் அணியைச் சேர்ந்த ஐந்து வீராங்கனைகளும் ஆடவர் அணியினருடன் இணைந்து புகைப்படத்தில் இடம் பெற்றுள்ளனர்.

நைக்
நைக் நிறுவனம்தான் பிசிசிஐயின் கிட் ஸ்பான்சர் ஆகும். இந்திய அணியின் சீருடை உள்ளிட்டவற்றில் நான்கு அம்சங்கள் இடம் பெற்றிருப்பதாக நைக் கூறியுள்ளது.

கலைநயம்
சட்டைகளின் காலர்கள் நவீனமாக்கப்பட்டுள்ளது. புதிதாக பிசிசிஐ லோகோவும் மோல்ட் செய்யப்பட்டுளளது. கலைநயத்துடன் கூடியதாக இவை இடம் பெற்றுள்ளன.

லேசர் கட் தொழில்நுட்பம்
லேசர் கட் தொழில்நுட்பத்துடன் கூடியதாக உடைகளை வடிவமைத்துள்ளனராம். விளையாடும்போது அதிகம் வியர்க்கும் என்பதால் கூலாக இருக்கும் வகையில் இந்த சீருடையை வடிவமைத்துள்ளனர்.

மூவண்ணம்
இந்திய தேசியக்கொடியின் மூவண்ணத்தையும் சட்டையில் மறக்காமல் இடம் பெறச் செய்துள்ளனர்.

ரீசைக்கிள்ட் பாலியெஸ்டர்
100 சதவீதம் ரீசைக்கிள்ட் பாலியெஸ்டரால் ஆனது இந்த ஜெர்சி என்று நைக் கூறியுள்ளது.

மார்ச் 15ல் முதல் போட்டி
மார்ச் 15ம் தேதி நாக்பூரில் தனது முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்காவைச் சந்திக்கிறது இந்தியா. மார்ச் 8ம் தேதி தொடங்கி ஏப்ரல் 3ம் தேதி வரை உலகக் கோப்பைப் போட்டிகள் நடைபெறவுள்ளன.


Click it and Unblock the Notifications