For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

போகிற போக்கில் கெய்ல் சாதனையை காலி செய்து விட்டுப் போன கோஹ்லி!

மொஹாலி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நேற்றைய போட்டியில் இந்தியாவுக்கு வெற்றித் தேடித் தந்த கையோடு, மேற்கு இந்தியத் தீவுகளின் கிறிஸ் கெய்லின் சாதனையையும் கோஹ்லி முறித்து விட்டுப் போனார்.

அதி வேகமாக டி20 போட்டிகளில் 1500 ரன்களைக் கடந்த வீரர் என்ற சாதனையை கெய்லிடமிருந்து நேற்று பறித்து விட்டார் கோஹ்லி.

கெய்ல் செய்திருந்த சாதனையை மிகக் குறைந்த போட்டிகளில் நிகழ்த்தி அசத்தியுள்ளார் கோஹ்லி என்பது முக்கியமானது.

பெஸ்ட் பேட்ஸ்மேன்

பெஸ்ட் பேட்ஸ்மேன்

தற்போதைய நிலையில் இந்தியாவின் மிகச் சிறந்த பேட்ஸ்மேன் விராத் கோஹ்லி என்பதை நேற்றைய ஆட்டத்தைப் பார்த்த அத்தனை பேரும் உணர்ந்திருப்பார்கள்.

கெய்ல் சாதனை உடைந்தது

கெய்ல் சாதனை உடைந்தது

நேற்றைய போட்டியின்போது கெய்லின் சாதனையை கோஹ்லி முறியடித்தார். அது விரைவாக 1500 ரன்களைக் குவித்த சாதனையாகும்.

45 இன்னிங்ஸ்களில் கெய்ல்

45 இன்னிங்ஸ்களில் கெய்ல்

கெய்ல் 39 இன்னிங்ஸ்களில் 1500 ரன்களைத் தொட்டு சாதனை படைத்திருந்தார். அதை நேற்றைய போட்டியில் கோஹ்லி உடைத்தார்.

39 இன்னிங்ஸ்களில் கோஹ்லி சாதனை

39 இன்னிங்ஸ்களில் கோஹ்லி சாதனை

ஆனால் கோஹ்லி இதை 39 இன்னிங்ஸ்களில் முறியடித்து புதிய வரலாறு படைத்துள்ளார். மேலும் டி20 போட்டிகளில் 1500 ரன்களைக் குவித்த முதல் இந்திய வீரர் கோஹ்லிதான்.

அபாரமான சராசரி

அபாரமான சராசரி

மேலும் இப்பட்டியலில் சிறந்த சராசரியும் கோஹ்லியிடம்தான் உள்ளது. அவரது சராசரி 55.42 ஆகும். இதுவரை 42 போட்டிகளில் ஆடியுள்ளார் கோஹ்லி.

நேருக்கு நேர்

நேருக்கு நேர்

கோஹ்லியும், கெய்லும் நேருக்கு நேர் தங்களது பலத்தைப் பரிசோதிக்கும் வாய்ப்பும் தற்போது கூடி வந்துள்ளது. அதாவது மார்ச் 31ம் தேதி மும்பையில் நடைபெறும் உலகக் கோப்பை அரை இறுதிப் போட்டியில் இந்தியாவும், மேற்கு இந்தியத் தீவுகள் அணியும் மோதவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, March 28, 2016, 11:55 [IST]
Other articles published on Mar 28, 2016
English summary
Virat Kohli has broken WI's Chris Gayle's record in Mohali during the match against Australia.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+