டோணி எடுத்தது மிகப்பெரிய ரிஸ்க்.. வங்கதேச ரன் அவுட் பற்றி கோஹ்லி
டெல்லி: வங்கதேசத்துக்கு எதிரான சூப்பர்-10 சுற்று போட்டியில் வெற்றியை பெற்றுத்தந்த டோணியின் சமயோஜித ரன்-அவுட் செயலை, துணை கேப்டன் விராட் கோஹ்லி வெகுவாக புகழ்ந்துள்ளார்.
கடைசி 1 பந்தில் 2 ரன்கள் தேவையென்ற நிலையில், பாண்ட்யா வீசிய பந்து பேட்ஸ்மேனின் பேட்டில் படாமல் ஸ்டம்புக்கு பின்னால் குறிப்பிட்ட அளவு தூரத்தில் நின்று கொண்டிருந்த டோணியின் கைகளில் தஞ்சமடைந்தது.
இருப்பினும், 1 ரன் ஓடினால் ஆட்டம் டிராவாகிவிடும் என்பதால், பேட்ஸ்மேன்கள் ரன் ஓடத்தொடங்கினர்.

ஓடி வந்து அவுட்
டோணியோ பந்தை ஸ்டம்பை குறிபார்த்து எறியாமல் ஓடிவந்து ஸ்டம்பை பதம் பார்த்து, அவுட் செய்தார். இதனால் வங்கதேசத்துக்கு ஒரு ரன்னும் கிடைக்காமல் போனது. இந்தியா, ஒரு ரன் வித்தியாசத்தில் வென்றது.

நெஹ்ராவும் கூல்
இதுகுறித்து கோஹ்லி இன்று அளித்த பேட்டியில் சிலாகித்ததாவது: நெருக்கடியான சமயங்களில் டோணி மிகவும் கூலாக ஆடுவார் என்பது அனைவரும் அறிந்ததே. அதேபோன்ற ஒரு வீரர்தான் ஆஷிஷ் நெஹ்ரா. அவர் டோணிக்கு அருகே, ஷாட் ஃபைன் லெக் பகுதியில் ஃபீல்டிங் செய்துகொண்டிருந்தார்.

நான் ஐடியா தரல
நான் பவுண்டரி எல்லையில் நின்று கொண்டிருந்தேன். எனவே, டோணியும், ஆஷிஷ் நெஹ்ராவும்தான் அடிக்கடி, ஆலோசித்துக்கொண்டனர். இருவருமே கூலாக நிலமையை சமாளித்தனர்.

எல்லோரும் எறிந்திருப்பார்கள்
கடைசி பந்தில் பேட்ஸ்மேன் ரன் ஓடியபோது, டோணி நினைத்திருந்தால் ஸ்டம்பை நோக்கி பந்தை எறிந்திருக்கலாம். பதற்றமான அந்த சூழ்நிலையில் பெரும்பாலான விக்கெட் கீப்பர்கள் அதைத்தான் செய்வார்கள்.

கணித்த டோணி
டோணியோ, பேட்ஸ்மேன் ஓடிவரும் வேகத்தைவிட தன்னால் ஸ்டம்பு அருகே வேகமாக ஓட முடியும் என்பதை நொடிப் பொழுதில் கணித்து, அதை செயல்படுத்தியும் காட்டிவிட்டார். அந்த குறுகிய நேரத்தில் சிறந்த முடிவை எடுக்க அவரது அமைதித்தன்மைதான் காரணம்.

ரஸ்க் போன்ற ரிஸ்க்
டோணி எடுத்தது மிகப்பெரிய ரிஸ்க். ஆனால், அந்த ரிஸ்கை கணித்து எடுத்ததன் காரணமாக, இந்தியாவுக்கு அவரால் வெற்றியை பரிசளிக்க முடிந்தது. இவ்வாறு கோஹ்லி தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications